நமது உயிரை நாமே வாழ வைப்போம்.

  • 10

 

இவ்வுலகில் மனித மற்றும் மிருகங்களின் உடல்கள் இயங்குவதற்கான அடிப்படைச் சக்தியே உயிராகும். இந்த உயிரை இதுவரைக்கும் யாருமே கண்டதும் இல்லை, அதன் பாரத்தை நிறுத்ததும் இல்லை. அது எங்கிருந்து வந்து எமது உடலில் குடிகொண்டது, அது எப்பொழுது எம் உடலை விட்டுப் பிரியும் என்ற அறிவும் யாருக்கும் இல்லை. செவ்வாய்க் கிரகம் வரைக்கும் சென்றுவர எத்தனிக்கும் இந்த நவீன வளர்ச்சி கண்ட உலகத்திற்கு, இந்த உயிரியல் வேட்டையானது இன்று வரைக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்த புரியாத புதிரான உயிரைப் பற்றி நாம் ஓரளவாவது விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் உண்மைக்குப் புறம்பாக எதையுமே சொல்லாத தூய இஸ்லாத்தை படிப்பதினூடாகவே விளங்கிக் கொள்ள முடியும்.

நவீன அறிவியல் ஆராய்ச்சிகளிலும், தொழிநுட்ப வளர்ச்சியிலும் உச்ச நிலையில் உள்ள இன்றைய உலகம். இன்றுவரைக்கும் உயிரோடு மல்லுக்கட்டித்தான் கொண்டிருக்கின்றது. உடலை விட்டுப் பிரியும் உயிரை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள், விதவிதமான உயர் பரிசோதனைகளை எல்லாம் செய்கின்றார்கள். ஆனால் அத்தனை மனித முயற்சிகளும் தோல்வியில் தான் முடிகின்றது. இந்த உயிருடன் பாரபட்சமின்றி அதாவது ஏழை,பணக்காரன், கருப்பன்,வெள்ளையன் என்று உலகில் உள்ள யாவரும் உயிரோடு போராடித்தான் செத்து மடியவேண்டும்.இது தான் மறுக்கமுடியாத யதார்த்தமாகும்.

நம் உடலினும் உயிர் நிலைபெற வேண்டும் என்றால் சுவாசம் அவசியமானதாகும். இந்த உயிரும், சுவாசமும் நகமும் சதையும் போன்று பின்ணிப்பிணைந்த ஒன்றாகும்.மூச்சு நின்று விட்டால் உயிர் பிரிந்து விடும். நாம் சுவாசத்தைச் சீர்செய்தல், கட்டுப்படுத்தல் மூலம் நம் உடலையும்,வாழ்வையும் சீரமைக்க முடியும்.

நாம் சுவாசத்தை எவ்வாறு சீர்செய்வது?, கட்டுப்படுத்துவது?. அது தான் எமது கட்டுப்பாட்டில் இல்லையே என்று நமக்குள் ஒரு கேள்வி எழலாம். ஆனால் யதார்த்தம் இது தான் இன்றைய நவீன உளவியல் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு மனிதனின் நிலைக்கு ஏற்ப சுவாசத்தின் வேகம் தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது ஒரு மனிதன் எல்லா நேரமும் ஒரு நிலையில் இருப்பதில்லை. ஒரு பொழுதில் சந்தோஷமாக இருப்பான், ஒரு பொழுதில் கவலையாக இருப்பான். இது காலச்சக்கரத்தின் நிர்ப்பந்த நிலையாகும்.

ஒரு மனிதன் கவலையாக இருக்கும்போது அவனை அறியாமலேயே சுவாசத்தின் வேகம் படிப்படியாக குறைவடைந்து செல்கின்றது(Low pressure).அவ்வாறே ஒரு மனிதன் சந்தோஷமாக இருக்கும் சுவாசத்தின் வேகம் தானாகவே அதிகரிக்கின்றது(High pressure). இந்த இரண்டு நிலையுமே மனித உயிருக்கு ஆபத்துதான். இவ்வாறு சுவாசத்தின் வேகமானது நமது கட்டுப்பாடு இன்றியே ஒவ்வொரு நாளும் கூடிக் குறைகின்றதை நம்மால் உணரமுடிகின்றது. ஆனால் நமது கட்டுப்பாட்டில் இல்லாத சுவாச மூச்சை இனி நாம் கட்டுப்படுத்தப் போகின்றோம். என்ன ஆச்சரியமாக உள்ளதா?. வாருங்கள் உண்மையை அறிவோம்.

முதலில் நாம் மூளையைப் பற்றி பார்ப்போம். நம் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களையும் நிர்வகிக்கும் ஆற்றல் பெற்றது இந்த மூளைதான். நம் செயல்களை செய்ய தீர்மானிப்பதும் இந்த மூளைதான். நாம் ஒன்றைப் பார்க்கின்றோம் என்றால் முதலில் பார்த்தது நம் கண்கள் அல்ல, நம் மூளைதான். நாம் ஒன்றை கேட்கின்றோம் என்றால் முதலில் கேட்டது காது அல்ல, மூளைதான். என்ன ஆச்சரியமாக உள்ளதா?. ஆனால் உண்மை இதுதான் நாம் எந்த செயலைச் செய்ய எத்தனிக்கின்றோமோ! அச்செயலின் உரிமையாளனான மூளையால் தீர்மானிக்கப்பட்டு அதற்கு பிறகு தான் நம் உடலுக்கு மூளையால் அவைகள் தூண்டப்படுகின்றன.

மனிதனின் செயல்களுக்கு காரணம் மூளையல்ல, மனம் தான் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். ஆகையால் மூளையும், மனமும் பற்றிய புரிதல் எமக்கு அவசியமாகும். உதாரணத்திற்கு நாம் ஒரு (CD) யை எடுத்துக் கொள்வோம். CD யை நாம் கண்களால் பார்க்க முடியும். ஆனால் அதில் உள்ள விடயங்களை நம்மால் தொட்டு உணரமுடியாது. அதேபோன்று தான் நம் மூளையும், மனமும் நம்மால் தொட்டு உணரக்கூடிய பருப்பொருள் மூளையென்றும், தொட்டு உணரமுடியாது பதிவுகளுக்கு மனம் என்றும் புரிந்து கொள்ளலாம். ஒரு கணினியின் உள்ள வன்பொருள், மென்பொருள் போன்று நம் மூளையையும், மனதையும் இனைத்துக் காட்டலாம்.

ஒரு மனிதனின் நிலைக்கு ஏற்ப சுவாசத்தின் வேகம் தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது ஒரு மனிதன் கவலையாக இருக்கும்போது சுவாசத்தின் வேகம் குறைவடைந்து சுவாசத்தின் மூலம் மூளைக்குக் கிடைக்கக் கூடிய ஒட்சிசன் குறைவடைகிறது. இதனால் மூளையானது கலைப்புறுகிறது. உடல் பலவீனமடைகிறது. அவ்வாறே ஒரு மனிதன் சந்தோஷமாக இருக்கும்போது சுவாசத்தின் வேகம் அதிகரித்து அதனூடாக ஒட்சிசன் மூளைக்கு அதிகமாக வழங்கப்படுகின்றது. இதனால் அவரின் உடல் பலமடைந்து ஆற்றல் மிக்கவராக திகழ்கிறார். நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றலை துடிப்பாக உள்ள மூளை அவருக்கு வழங்குகின்றது. இதன் மூலம் மூளையில் உதிக்கும் எண்ணங்கள் அல்லது மனதில் பதியும் தகவல்கள் மனிதனின் சுவாசத்தை சீர் செய்ய அவசியமாகின்றன.

ஆகவே ஒரு மனிதன் சீராக சுவாசித்து தன் வாழ்நாளில் ஒவ்வொரு பொழுதையும் சுவாரஸ்யமாக கழிக்கவேண்டும் என்றால் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளமுடியும். இன்பகரமான தகவல்கள், நன்மை பயக்கும் எண்ணங்களினால் நாம் இன்புற்று நம் உயிரை நாமே வாழவைப்போம்.

.

P.M.A.ALEESAN.
(VIRUTHODAI )
(SEUSL).
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

  இவ்வுலகில் மனித மற்றும் மிருகங்களின் உடல்கள் இயங்குவதற்கான அடிப்படைச் சக்தியே உயிராகும். இந்த உயிரை இதுவரைக்கும் யாருமே கண்டதும் இல்லை, அதன் பாரத்தை நிறுத்ததும் இல்லை. அது எங்கிருந்து வந்து எமது உடலில்…

  இவ்வுலகில் மனித மற்றும் மிருகங்களின் உடல்கள் இயங்குவதற்கான அடிப்படைச் சக்தியே உயிராகும். இந்த உயிரை இதுவரைக்கும் யாருமே கண்டதும் இல்லை, அதன் பாரத்தை நிறுத்ததும் இல்லை. அது எங்கிருந்து வந்து எமது உடலில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *