முஸ்லிம் அமைச்சரே அல்லாஹ் உங்கள் மீது விதித்த பொறுப்பை சரியாக நிறை வேற்றுங்கள்

  • 12

பேருவளை ஹில்மி

கௌரவ அமைச்சர் அவர்களே கடந்த காலங்களில் பதவிகளையும், ஆட்சிகளையும் பாதுகாக்க, மத குருக்களை கூலிக்கு அமர்த்தி முஸ்லிம்களை பழிவாங்கும் நடவடிகை பல்வேறுபட்ட காலப் பகுதிகளில் சூட்சகமாக கை கொள்ளப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகின்றது .

இந்த வகையில் அரசுக்கு ஆதரவு குறைவடைந்து எதிர்ப்புக்கள் வலுவடையும் இந்த வேளையில், மீண்டும் வழமைபோல் முஸ்லிம்களை நிந்திக்கும் மத குரு கூவத் தொடங்கியுள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி, தாங்கள் உட்பட, முஸ்லிம்கள் வழிபடும், தூய இறைவன் மீதும் அபாண்டங்களை சுமத்தி கருத்துக்களை வெளியிட்டார்.

கவலைக்குரிய விடயம் இதுபற்றி பாராளுமன்றத்தில் எவரும் குரல் கொடுக்கவில்லை. மாறாக குரல் கொடுத்த மாற்று மத சகோதர மந்திரிக்கும் இடைஞ்சல் கொடுத்ததை காணமுடிந்தது. மேலும் இவ்வேலையில் தாங்களும் சபையில் மௌனமாக வீற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர்ரஹ்மான் அவர்களின் கேள்விக்கு பதிலளித்த, பொலீஸ் பாதுகாப்புக்கான அமைச்சர். இந்த மத குருவின் செயல்பாட்டை நியாயப்படுத்திப் பேசினார்.

அதாவது முஸ்லிம்கள் ISIS சிந்தனையை உடையவர்கள் என்றும், எவ்வேளையிலும் தாக்குதல்கள் நடத்தலாம் எனவும், அதையே தேரர் குறிப்பிட்டதாகவும். தேரருக்கு ஆதரவாகவும் நன்றி செலுத்தி கருத்து தெரிவித்தார்.

எனவே, பல விதத்திலும் முஸ்லீம்களின் மனதை புண்படுத்தி, முஸ்லிம்களை ஆத்திரமூட்டி, அதனால் வெளிப்படும் செயல்களிலிருந்து குளிர் காய்வதும், மீண்டும் ஒரு முறை முஸ்லிம்களின் மீது பழியை சுமத்தி பதவியை தக்க வைத்துக் கொள்வது இவர்களின் திட்டமா எனத் தெரியவில்லை.

சட்டத்தை சாறாய் குடித்து, சக்கை போட்டு, சட்டத்தில் சாணக்கியனாக இருக்கும் உங்களின் சிந்தனைக்கு இவ் விடயங்கள் எட்டாதது வியப்பாகவே உள்ளது.

கடந்த தேர்தலின் போது, தான் ஒரு முஸ்லிம் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் எந்த அநியாயங்களுக்கும் தான் ஒத்துப் போக மாட்டேன் என்றும், அவ்வாறானால் இந்தப் பதவியை தூக்கி யெறிந்துவிட்டு வெளியேற நான் தயாராக இருக்கின்றேன். என முஸ்லிம் சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை இவ்வேளையில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

கௌரவ அமைச்சர் அவர்களே, தாங்கள் இந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் பதவி ஒன்றை வகிக்கின்றீர்கள். இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமாகவும், முஸ்லிம்கள் சம்பந்தமாகவும், பெரும் பொறுப்பு ஒன்றை அல்லாஹுத்தஆலா உங்கள் மீது சுமத்தி யுள்ளான்.

கடந்த சில நாட்களாக தீடீரென குறிப்பிட்ட தேரர் களத்தில் தோன்றி முஸ்லிம்கள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட செய்திகளும், குற்றச் சாட்டுக்களும் இந்த நாட்டில் முஸ்லிம்களை மீ்ண்டும் ஒரு பீதி சூழ்ந்த , பயங்கரமான, நிம்மதியற்ற மன அழுத்தத்தின் பால் இட்டுச் சென்றுள்ளதை அறிய முடிகின்றது.

கடந்த காலங்களில் நடந்த அழிவுகளினால் முஸ்லிம் சமூகம் எவற்றை இழக்கக் கூடாதோ, அவற்றை எல்லாம் இழந்து விட்டது.

பாதைகளில் பெண்களுக்கு நடந்து செல்ல முடியாத நிலை, அன்று தொழில் அதிபர்களாக இருந்தவர்கள், இன்று தொழிலாலர்களாக, பலரை பராமரித்தவர்கள், இன்று பலரால் பராமறிக்கப்படும் நிலை. தகப்பனை இழந்த அனாதைகளாக பல குடும்பங்கள். இத்தனையும் அரசியல் அதிகாரங்களை கைப்பற்றவும் பதவிகளை தக்கவைத்துக் கொள்ளவும் முஸ்லிம் சமூகத்தின் மீது நடந்த அநியாயங்களும் அக்கிரமங்களும் என்பதை மறுப்பதற்கில்லை.

இவ்வாறான கசப்பான அனுபவங்களையும், வேதனைகளையும், சேதனையையும் இனியும் இந்த சமூகத்தினால் தாங்க முடியாது.

முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய நீங்கள், உங்களுக்கு வழங்கப்பட்ட பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக வாய்மூடி இருக்கின்றீர்களா எனத் தெரியவில்லை.

தேரரின் கூற்றை நியாயப்படுத்திய அமைச்சர், பாராளுமன்றத்தில் உங்களது சக நண்பராக உங்களுக்கு அடுத்த கதிரையில், பாராளுமன்றத்தில் ஆசனம் ஒதுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளது. அவர் உங்கள் பக்கத்தில் உட்கார்ந்த வாரே முஸ்லிம்கள் மீது வெறுப்பான ஆத்திரம் மூட்டக்கூடிய உறைகளை நிகழ்த்தினார்.

நீங்களும் ஒரு முஸ்லிம் என்ற வகையில் இவற்றை கண்டிப்பதாகவே, இவ்வாறான வார்த்தைகளை, எவ்வாறு ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் செவிமடுத்து பக்கத்தில் அமர்ந்து இருந்திருப்பீர்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

கௌரவ அமைச்சர் அவர்களே. தேர்தல்களின் போது நீங்கள் சொன்னது போன்று, முஸ்லிம்கள் அனைத்து முட்டைகளையும் ஒரு கூடையில் போடாது 20 வீதமான முட்டைகளை உங்கள் கூடையிலே போட்டனர் என்பதை தாங்கள் மறந்து விட்டீர்கள். மேலும், நாடு பூராவும் உள்ள முஸ்லிம் ஊர்களுக்குச் சென்று, அங்குள்ள முட்டைகளையும் உங்கள் கூடைகளுக்கு வாங்கிக் கொடுத்ததையும் தங்கள் மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால் எத்தனை முட்டைகளை உங்கள் கூடையில் போட்டாலும் பிரயோசனமில்லை என்பதை சமூகம் தற்போது உணர்கின்றது.

எத்தனை முஸ்லிம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்தாலும் இன்று ஒருவருமே இல்லாத நிலை. முஸ்லிம்கள் மீது உச்ச பட்ச ஆத்திரத்தையும், உணர்வுகளையும் தூண்டும் இவர்களை அடக்க முடியாத நிலை. இதற்காக வாய்திறக்க கூட ஒருவர் இல்லாத நிலை. இது சம்பந்தமாக முஸ்லிம்களின் மன நிலை சம்பந்தமாக மேல் இடங்களுக்கு கொண்டு செல்ல நாதி இல்லாத நிலை.

சிறைச்சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக, மன்னிப்பையும் ஆத்திரத்தையும், கோபத்தையும், பாராளுமன்றத்தில் வெளியிட்ட தாங்கள், முஸ்லிம் சமூகம் சம்பந்தமாகவும், படைத்தரப்பின் மீது அபாண்டம் செலுத்தியது சம்பந்தமாகவும் தாங்கள் கண்டு கொள்ளாதது, இது வரையில் ஒரு சொல் கூட வாய் திறக்காததின் மர்மம் தான் தெரியவில்லை. இது முஸ்லிம் சமூகத்தை மேலும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

தாங்களின் வாதப்படி முஸ்லிம் வாக்குகளால் பாராளுமன்றம் செல்லவில்லை, என்றாலும், முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரதிநிதியாகவே தாங்கள் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டீர்கள் என்பதே உண்மை.

எனவே உங்கள் மீது அல்லாஹ் ஒரு பொறுப்பை சாட்டியுள்ளான். அல்லாஹ்வின் பதிலுக்காகவாவது சமூகம் சம்பந்தமாகவும், மார்கம் சம்பந்தமாவும், தாங்கள் மீது சாட்டப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றுவீர்களா?

பேருவளை ஹில்மி கௌரவ அமைச்சர் அவர்களே கடந்த காலங்களில் பதவிகளையும், ஆட்சிகளையும் பாதுகாக்க, மத குருக்களை கூலிக்கு அமர்த்தி முஸ்லிம்களை பழிவாங்கும் நடவடிகை பல்வேறுபட்ட காலப் பகுதிகளில் சூட்சகமாக கை கொள்ளப்பட்டு வந்துள்ளதை அறிய…

பேருவளை ஹில்மி கௌரவ அமைச்சர் அவர்களே கடந்த காலங்களில் பதவிகளையும், ஆட்சிகளையும் பாதுகாக்க, மத குருக்களை கூலிக்கு அமர்த்தி முஸ்லிம்களை பழிவாங்கும் நடவடிகை பல்வேறுபட்ட காலப் பகுதிகளில் சூட்சகமாக கை கொள்ளப்பட்டு வந்துள்ளதை அறிய…