பாடசாலைகள் விரைவாக திறப்பதை விரும்பும் மாணவர்கள்

  • 25

பாடசாலைகளை விரைவாக திறந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்கு மாணவர்களாகிய நாங்களும் பெற்றோரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்.

கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக பாடசாலைக்கு செல்லாமல் இருப்பதால் மாணவர் சமூகம் கவலை கொண்டுள்ளதாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் அதிசித்திபெற்ற மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களது கல்வி முறை கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக இணைய தளம் வாயிலாக மற்றும் தனிப்பட்ட ஆசிரியர்களின் கவனிப்பு காரணமாகவே இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் அவர்கள் தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு படித்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமக்கு பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் எப்போது சென்று அமர்ந்து எனது நண்பர்களுடன் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கம் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். அரசாங்கம் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளை திறப்பதற்கு ஏற்பாடு செய்யும் பட்சத்தில் மாணவர்களாகிய நாமும் பெற்றோரும் பரிபூரண ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் தெரிவித்தனர் .2

பாடசாலைகளை விரைவாக திறந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்கு மாணவர்களாகிய நாங்களும் பெற்றோரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம். கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக பாடசாலைக்கு…