ஊரடங்கு ஒக்டோபர் 01 அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்

  • 20

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

அத்துடன் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் விரைவாக அறிவிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஒரு சில கட்டுப்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ள அவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இது தொடர்பான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட்-19 பரவலின் 3ஆம் அலையின் உக்கிரத்தை அடுத்து, கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய…

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய…