இலங்கையில் மீண்டும் குண்டுத் தாக்குதல் எச்சரிக்கையா?

  • 12

ஞானசார தேரரினால் இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று ஊடக நேரலையொன்றில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து இரு வாரம் கடந்துள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக கைக்குண்டு மீட்பு, மின்னஞ்சல் எச்சரிக்கை என்று சில சம்பவங்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

அவ்வாறு பரவுகின்ற இன்னொரு செய்தியே தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதாகும்.

தாக்குதல் இடம்பெறவுள்ளதாக தகவல்?

நேற்றைய தினம் (28) கடற்படை அதிகாரிகள் குழுவினர், ஜா-எல போபிட்டியவிலுள்ள புனித நிக்கலஸ் தேவாலயத்திற்கு சென்று, குண்டுத் தாக்குதல் இடம்பெறவுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதால், தேவாலயத்தில் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளது.

அங்கு வந்த கடற்படை அதிகாரி, குறித்த வேளையில் தேவாலயத்தின் தந்தை அங்கில்லாததைத் தொடர்ந்து, அங்கிருந்த பணிப் பெண்ணிடம், இதனைத் தெரிவித்துள்ளதுடன், தெரியாதவர்களை ஆலயத்திற்குள் எடுக்க வேண்டாமெனவும் தெரிவித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். 

இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.  ஞானசார தேரரும் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுமென கூறியிருந்த நிலையில், தற்போது இலங்கை கடற்படையினராலும் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படக்கூடும் என கூறியுள்ளதை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது.

இலங்கை கடற்படையினர் தவறுதலால் நடந்தவொன்று என உஸ்வெட்டகேயாவ கடற்படை  முகாமினர் கூறியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் இலங்கை கடற்படை இராணுவத்தளபதி  மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும்  உயிர்த்த ஞாயிறு தாக்குலுக்கு நீதி கோரும் குழுவின் உறுப்பினரான அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரால் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படக்கூடும் என கூறிய விடயம் தொடர்பில் கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று  நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து மீண்டுமொரு முறை ஏதேனும் வகையில் தாக்குதல் நடத்தப்படும் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும்,  குருவானவர்கள் போல் உடையணிந்து வருவர்கள் குறித்து அவதானம் செலுத்தும்படியும்  இலங்கை கடற்படையின் வெலிசரை முகாமைச் சேர்ந்தவர்கள் போப்பிட்டி,வெலிகம்பிட்டி,வத்தளை, ராகம ஆகிய ஆலயங்களுக்கு காலைவேளையில் அறிவித்துவிட்டுச் சென்றுள்ளனர். எனினும், இலங்கை கடற்படையினர் இது தவறுதலாக நடந்த விடயம் என மாலை வேளையில் குறித்த ஆலயங்களுக்கு கூறியுள்ளனர்.

எமக்குள்ள மிக பிரதான பிரச்சினை என்னவென்றால்,இந்த சம்பவத்தை  தவறுதலாக நடந்த விடயம் என தற்போது எதற்காக கூறுகிறார்கள்? இது தேசிய பாதுகாப்பு பிரச்சினைக்குரிய விடயமாகும். இந்த மீண்டும் தாக்குதல் என்பது தேவாலயங்களை மாத்திரம் இலக்கு வைத்து நடத்தப்படவுள்ளதா? ஏனெனில், உயிர்த்த தின தாக்குதல்களின்போது நட்சத்திர ஹோட்டல்களும் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சுக்கோ அல்லது புலனாய்வு துறைக்கோ அல்லது கர்தினாலுக்கோ தெரிவிக்காதது ஏன்? என பல கேள்விகள் எழுகின்றன.

நிச்சியமாக இவ்விடயத்தை தவறுதலாக நடந்த விடயம் என கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. தவறுதல் என கூறுவதாயின் அந்த தவறுதல் என்ன  என்பதை விளக்க ‍வேண்டும். இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாது பாதுகாப்பு துறையினர் தேடிப்பார்க்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வுத் துறையினர் கட்டாயமாக இது தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும். அத்துடன் தேவாலயங்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், மீண்டும் ஒரு தாக்குதல் என்பதை அவர்கள் காரணமில்லாமல் வெறுமனே கூறியிருக்க மாட்டார்கள். என்ன காரணத்துக்காக அவர்கள் அவ்வாறு கூறினார்கள்? அவர்களுக்கு கட்டளையிட்டது யார்? அதன்பின்னர் தவறுதலாக நடத்த விடயம் என கூறுவது தொடர்பில் கட்டாயமாக ஆராயப்பட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு பொறுப்புக் கூற வேண்டும். ஏனெனில், இதுபோன்ற பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களை கர்தினாலுக்கு யார் அறிவிப்பது தொடர்பில் தெளிவுபடுத்த ‍வேண்டும். அப்படி எவரெனும் ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்படும்போது அவரிடமிருந்து ‍பெறும் தகவல்களின்படி செயற்பட முடியும்.

மேலும், ஞானசார தேரரரும் அண்மையில் மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தப்படும் எனவும், அதனை யார் நடத்துவார்கள் என்ற தகவல் தம்மிடம் இருப்பதாக கூறியிருந்தார். அவ்விடயம் தொடர்பிலும் பாதுகாப்புத் துறையினர்  கவனமெடுக்க வேண்டும். இது தொடர்பான கடிதமொன்றை கர்தினால் ஆண்டகை அவர்கள் , பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை கடந்த 22 ஆம் திகதியன்று அனுப்பியிருந்தபோதும் அதற்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.

போப்பிட்டி உள்ளிட்ட தேவாலயங்களுக்கு வருகை தந்து தகவல் தெரிவித்த இலங்கை கடற்படையினர் சீருடை அணிந்தா வருகை தந்திருந்தனர் என வீரகேசரி கேட்டதற்கு,

தகவல் தர வருகை தந்தவர்கள் இலங்கை கடற்படை சீருடை அணிந்து வந்தே மேற்படி தகவல்களை தெரிவித்தனர். அதற்கான காணொளிக் காட்சிகள் எம்மிடம் உள்ளன. போப்பிட்டி , வெலிகம்பிட்டி ஆலயங்கள் கடற்கரைக்க அண்மித்தே காணப்படுகின்றன. இந்த தாக்குதல் வெறுமனே தேவாலயங்களுக்கு மாத்திரமா அல்லது சுற்றுலா இடங்களுக்குமா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில்பெல மாதங்களாகவே தேவாலயங்கள் ‍ பூட்டியே கிடக்கின்றன. இங்கு பக்தர்கள் வருவதும் இல்லை. ‍

வழிபாடுகள் நடத்தப்படுவதுமில்லை. எனினும், எமது பகுதி சுற்றுலாத்துறையினர் அதிகம் வந்துபோகும் இடமாகும். இங்கு ஹோட்டல்கள் அதிகமாக காணப்படுகின்றன. எதிர்வரும் காலத்தில் நத்தார் பண்டிகையும் வரவுள்ளது.

ஆகவே, இந்த தாக்குதல் சுற்றுலாத் துறையினரையும் பாதிக்குமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜா எல பகுதி கடற்கரையோர பகுதிக்கு பொறுப்பான அருட் தந்தை. சாந்த சாகர ஹெட்டியாராச்சி பதிலளித்தார்.

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கை

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்

சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல.

எனவே, இவ்வாறான அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில்  பொதுமக்கள் எவ்வித அச்சமுமடைய தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் வலியுறுத்தியுள்ளார். LNN Staff

ஞானசார தேரரினால் இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று ஊடக நேரலையொன்றில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து இரு வாரம் கடந்துள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக கைக்குண்டு மீட்பு, மின்னஞ்சல் எச்சரிக்கை என்று சில சம்பவங்கள் இடம்பெற்று…

ஞானசார தேரரினால் இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று ஊடக நேரலையொன்றில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து இரு வாரம் கடந்துள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக கைக்குண்டு மீட்பு, மின்னஞ்சல் எச்சரிக்கை என்று சில சம்பவங்கள் இடம்பெற்று…