வெலிகம அறபா தேசிய பாடசாலை சிறந்த பெறுபேறு

  • 19

அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேற்றின் படி, வெலிகம அறபா தேசிய பாடசாலை சிறந்த பெறுபேற்றை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் அதிபர் எம்.டீ.எம். முதஹ்ஹர் தெரிவித்தார்.

பரீட்சைக்குத் தோற்றிய மாணசவர்களுள் 80 சதவீதமானோர் க.பொ.த. உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

சித்தியடைந்தவர்களுள் ஏ.எப்.எப். ஆயிஷா பாஸி, எம்.எச்.எப். ஹப்ஸா ஹாபிழ்தீன், எம்.எம்.எப். ஹுமைரா மர்ஜான், எம்.எப்.எப். ஷஹீமா பைறூஸ் ஆகியோர் 9 பாடங்களிலும ‘ஏ” சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் எம்.ஐ.எப். அப்ஸல் அஹ்மத், எம்.ஜே.எப். பர்ஹா, எம்.எஸ்.எப். ஷபீஹா ஆகியோர் 8 பாடங்களில் ‘ஏ” சித்திகளையும் இது தவிர அதிகமானோர் 7, 6, 5, 4, பாடங்களில் ‘ஏ” சித்திகள் பெற்றுள்ளனர்.

ஒரே தடவையில் 4 பேர் 9 பாடங்களிலும் ‘ஏ” சித்தி பெற்றுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

இம் முறை சித்தியடைந்தவர்களுள் 74 மாணவர்கள் க.பொ.த. உயர்தர கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் கற்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனையோர் வர்த்தகம், கலை, மற்றும் தொழிநுட்ப பிரிவுகளில் கல்வி கற்க தெரிவாகியுள்ளனர்.

இவர்களுக்கு புதிய ஆண்டுக்கான வகுப்புக்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்லூரி அதிபர் எம்.டீ.எம். முதஹ்ஹர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேற்றின் படி, வெலிகம அறபா தேசிய பாடசாலை சிறந்த பெறுபேற்றை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் அதிபர் எம்.டீ.எம். முதஹ்ஹர் தெரிவித்தார். பரீட்சைக்குத் தோற்றிய…

அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேற்றின் படி, வெலிகம அறபா தேசிய பாடசாலை சிறந்த பெறுபேற்றை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் அதிபர் எம்.டீ.எம். முதஹ்ஹர் தெரிவித்தார். பரீட்சைக்குத் தோற்றிய…