தல்கஸ்பிட்டிய கிராமத்தில் அர்ப்பணிப்பான சமூகசேவகர் எம்.ஐ.எம். தாஹா

  • 13

என்.எம். அமீன்

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தல்கஸ்பிட்டிய கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவையாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான மர்ஹும் தாஹா இப்ராஹிம் லெப்பை_ அம்ரத் பீபி தம்பதியரின் மூன்றாவது புதல்வராக 1942.04.25 ஆம் திகதி பிறந்தார். தனது சிறு வயதிலேயே தாயை இழந்ததனால் வாழ்க்கையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி கல்வியைப் பெற்றார்.

அவர் தல்கஸ்பிடிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்று, பின்பு திப்பிட்டிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் சேர்ந்து சா.த பரீட்சையில் சித்தி பெற்றார். ஆரம்பத்தில் இவர் மலேரியா திணைக்களத்தில் மேற்பார்வையாளராகப் பணி புரிந்து பின்பு சொந்த வியாபாரத்தில் ஈடுபட்டார்.

தல்கஸ்பிடிய கிராமத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளிலும் இவரது பங்களிப்பு அளப்பரியது. 1969 இல் தாஜ்மஹால் சனசமூக நிலையத்தின் ஸ்தாபகத் தலைவராக இவர் தெரிவானார். மாணவர்களாக இருந்த போது நாம் ஆரம்பித்த தாஜ்மஹால் சனசமூக நிலையத்தை வெற்றிகரமாக நடாத்துவதற்கு மூத்த ஒருவராக இருந்து அவர் அளித்த வழிகாட்டல்கள் அதன் ஸ்தாபகச் செயலாளர் என்ற வகையில் நினைவுகூரத்தக்கதாகும்.

தல்கஸ்பிட்டிய பரிபாலனசபை கிராம அபிவிருத்திச் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளிலும் அங்கம் வகித்த மர்ஹும் தாஹா, பள்ளிவாசலை நிர்மாணித்தல், பிரதான வீதி, பாடசாலை அபிவிருத்தி, மின்சாரம், குடிநீர் வசதிகள், சுகாதார நிலையம் போன்ற ஊரின் தேவைகளைப் பெறுவதில் ஊர் முக்கியஸ்தர்களுடன் அளப்பரிய பணியாற்றினார்.

கிராமத்தின் அரசியல் செயற்பாட்டாளராக இருந்த இவர், மாறி மாறி தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆற்றிய பங்களிப்பினை கிராம மக்கள் இன்றும் நன்றியுடன் நினைவுபடுத்துகின்றனர்.

தல்கஸ்பிட்டியின் வரலாற்றை நூலுருப்படுத்தும் முயற்சிகளில் இவர் தனது பட்டதாரி மகளான ஆசிரியை பரிஹாவுடன் சேர்ந்து ஈடுபட்டிருந்தார். இவரது நீண்ட கால ஆசைக்கு கொரோனாத் தொற்று தடையாக அமைந்திருந்தது. கிராமத்தின் வரலாற்று ரீதியான தகவல்களை நன்கு அறிந்திருந்த இவர், அவற்றை முழுமையாக எழுதி விட்டே மரணித்துள்ளார். அதனை நூலுருவில் வெளியிடுவது இவருக்குக் செய்யும் கௌரவமாகும்.

தமிழ் போன்று சிங்களத்திலும் புலமை பெற்றிருந்த இவர், சிறந்த மேடைப் பேச்சாளருமாவார். இவர், தனது வீட்டுக்கு அருகில் இருந்த தல்கஸ்பிட்டிய தக்கியாப் பள்ளிவாசலை பராமரிப்பதில் நீண்ட காலமாக ஈடுபட்டார். அநேக சந்தர்ப்பங்களில் பள்ளிவாசலில் ஐவேளைத் தொழுகைகளை இவரே நடத்தி வந்தார்.

1995 இல் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டார். ஹெம்மாதகம பிரதேசத்தில் மர்ஹும் எம்.எம்.மஹ்மூத் ஆலிமின் மகளான சுலைகா அஜிலாவைத் திருமணம் முடித்த இவர், ஆறு பிள்ளைகளின் தந்தையாவார். சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் இவர்.

என்.எம். அமீன் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தல்கஸ்பிட்டிய கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவையாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான மர்ஹும் தாஹா இப்ராஹிம் லெப்பை_ அம்ரத் பீபி தம்பதியரின் மூன்றாவது புதல்வராக 1942.04.25 ஆம் திகதி பிறந்தார்.…

என்.எம். அமீன் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தல்கஸ்பிட்டிய கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவையாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான மர்ஹும் தாஹா இப்ராஹிம் லெப்பை_ அம்ரத் பீபி தம்பதியரின் மூன்றாவது புதல்வராக 1942.04.25 ஆம் திகதி பிறந்தார்.…