சமூக வலைத்தளங்கள் தீடீர் முடக்கம்

உலகமும் முழுவதும் பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வட்ஸ் எப் உள்ளது. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், காணொளி அழைப்பு போன்ற பல்வேறு வசதிகளை வட்ஸ் எப் வழங்கி வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம்தான் இந்த செயலியையும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று (04) இரவு 9.30 மணியளவில் இந்த மூன்று செயலிகளும் திடீரென முடங்கியதால், சமூக வலைதள பயன்பாட்டாளர்களும், இணையவாசிகளும் பெரும் தவிப்புக்குள்ளாகினர். இலங்கை மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் இந்தச் செயலிழப்பு ஏற்பட்டது.

மொபைலில் பயன்படுத்தப்படும் வட்ஸ் எப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மட்டுமன்றி கணினியில் இவை செயலிழந்தன.