60 நிமிடத்தில் விமர்சித்து, ஒரு நாளுக்குள் முடங்கிய வட்ஸ்அப் – 6 மணி நேரத்தில் வழமைக்கு

  • 13

பேஸ்புக், வட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மீண்டும் வழமைக்கு

உலகமும் முழுவதும் பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் சமூக வலைத்தளங்கள் சமார் 6 மணித்தியாலங்கள் நேற்று (04) முடங்கியது.

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வட்ஸ் எப் உள்ளது. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், காணொளி அழைப்பு போன்ற பல்வேறு வசதிகளை வட்ஸ் எப் வழங்கி வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம்தான் இந்த செயலியையும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று (04) இரவு 9.30 மணியளவில் இந்த மூன்று செயலிகளும் திடீரென முடங்கியதால், சமூக வலைதள பயன்பாட்டாளர்களும், இணையவாசிகளும் பெரும் தவிப்புக்குள்ளாகினர். இலங்கை மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் இந்தச் செயலிழப்பு ஏற்பட்டது.

மொபைலில் பயன்படுத்தப்படும் வட்ஸ் எப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மட்டுமன்றி கணினியில் இவை செயலிழந்தன. என்றாலும் அதிகாலை 4:00 மணி முதல் அவை மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன.

மன்னிப்புக் கோரிய பேஸ்புக்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே உடனடியாக பேஸ்புக் நிர்வாகம் ட்விட்டர் தளத்தின் ஊடாக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரி இருந்தனர். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,

எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று பேஸ்புக் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் நண்பர்கள் இப்போது கொஞ்சம் சிரமப்படுகிறார்கள், அவற்றைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு சிக்கல்கள் இருக்கலாம். எங்களுடன் பொறுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் அதில் இருக்கிறோம் என்று இன்ஸ்டாகிராமும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

மேலும், சிலர் தற்போது வாட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். விடயங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம், கூடிய விரைவில் ஒரு புதுப்பிப்பை இங்கு அனுப்புவோம் என்று வட்ஸ்அப் பதிவிட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேஸ்புக்கை விளாசிய நபர்

முன்னதாக நேற்று அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி சேனலின் 60 நிமிடங்கள் (“60 Minutes”) என்ற நிகழ்ச்சியில் பேசிய டேட்டா சைன்டிஸ்ட் ஒருவர் பேஸ்புக் நிறுவனத்துக்கு அதன் வலைபக்கத்தால் குழந்தைகளின் மனநலன் பாதிக்கப்படுகிறது என்பதும் பேஸ்புக் வாயிலாக வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் நன்றாகவே தெரியும்.

ஆனாலும், அது தன்னை விஸ்தரித்துக் கொண்டே இருக்கிறது. நான் என் வாழ்நாளிலேயே பேஸ்புக் போன்ற மோசமான நிறுவனம் ஒன்றை சந்தித்ததே இல்லை என்று கூறியிருந்தார்.

37 வயதான பிரான்சாஸ் ஹாகன் என்ற அந்த நபர் கூகுள், பிண்டெரஸ்ட் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

அவர் வெளிப்படையாக அப்படியொரு பேட்டியளித்த 24 மணி நேரத்துக்குள் பேஸ்புக் இன்கின் அனைத்து சமூக வலைதளங்களும் ஒரே நேரத்தில் முடங்கியுள்ளன.

ஏற்கெனவே, கடுமையான எதிர்ப்புக்கு இடையே தான் இன்ஸ்டாகிராம் தனது இஸ்டாகிராம் ஃபார் கிட்ஸ் திட்டத்தைக் கைவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. LNN Staff

பேஸ்புக், வட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மீண்டும் வழமைக்கு உலகமும் முழுவதும் பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் சமூக வலைத்தளங்கள் சமார் 6 மணித்தியாலங்கள் நேற்று (04) முடங்கியது. உலகம் முழுவதும்…

பேஸ்புக், வட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மீண்டும் வழமைக்கு உலகமும் முழுவதும் பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் சமூக வலைத்தளங்கள் சமார் 6 மணித்தியாலங்கள் நேற்று (04) முடங்கியது. உலகம் முழுவதும்…