கண்டெடுத்த தங்கச் சங்கிலியை பொலிஸில் ஒப்படைத்த சிறுவனின் முன்மாதிரி

  • 13

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, களுவன்கேணி கடற்கரையில் சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தவேளை கண்டெடுத்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை, ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து, சமூகத்துக்கான முன்மாதிரியைக் காண்பித்துள்ளார்.

மட்டு, மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இராசதுரை தனுகரன் என்ற இச் சிறுவன் கண்டெடுத்த தங்க ச்சங்கிலியை, உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கோரி, ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்தவிடம் நேற்று (20.10.2021) கையளித்தார்.

இதன்போது பிரதேச கிராம சேவை அதிகாரி வீ. உதயகுமார் மற்றும் சிறுவனின் சின்னம்மா ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.

குடும்பத்தின் கடைசியான மூன்றாம் பிள்ளையான இவர் குடும்ப வறுமை நிலைகாரணமாக பாடசாலைக் கல்வியைக் கைவிட்டுள்ளதுடன், இவரின் தாயார் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணியாற்றி வருகின்றார்.

இந்தச் சங்கிலியை, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரின்பராஜா சபேஷ் மட்டக்களப்பு, களுவன்கேணி கடற்கரையில் சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தவேளை கண்டெடுத்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை, ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து, சமூகத்துக்கான முன்மாதிரியைக் காண்பித்துள்ளார்.…