வெலிபிடிய கைத்தொழில் வலயம் மூலம் மாத்தறை மாவட்டத்திற்கு புதிய வேலை வாய்ப்புகள் – நிபுண ரணவக்க

  • 8

மாத்தறை மாவட்ட வெலிபிடிய பிரதேச செயலகத்தில் கைத்தொழில் வலயம் அமைப்பதன் மூலம மாத்தறை மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே நோக்கம் என்று பாராளுமன்ற உறுப்பினரும், மாத்தறை மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர் நிபுண ரணவக குறிப்பிட்டார்.

மாத்தறை வெலிகம சாலிமவுண்ட் தோட்டத்தில் புதிய கைத்தொழில் வலயம் அமைப்பது குறித்த விசேட கலந்துரையாடல் 22.10.2021 இன்று பாராளுமன்ற வளாகத்தில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. மேலும் குறித்த கூட்டத்தில் சபாநாயகரின் மஹிந்த யாப அபேவர்ந்தன அவர்களும் கலந்து கொண்டார்.

தென் மாகாணத்தில் தேசிய உற்பத்திக்கு அதிக பங்களிப்பு செய்வதன் மூலம் புதிய தொழில்முனைவு மற்றும் சேவை வாய்ப்புகள் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க தெரிவித்தார்.

மேலும் குறித்த கைத்தொழில் வலயம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைத்தொழில் வலயமானது 317 ஏக்கர் பரப்பளவை கொண்டது. அதில் உள்ளூர் ஏற்றுமதி மூலிகை உற்பத்திக்கு சுமார் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் கப்பல் தொழில் துறைக்காக 50 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலப்பரப்பில் உள்ள தொழிற்சாலைகள் அமையவுள்ளன.

கடந்த 18.10.2021 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வெலிபிடிய சாலிமண்ட் தோட்டத்தில் கைத்தொழில் வலயம் அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. Ibnuasad

மாத்தறை மாவட்ட வெலிபிடிய பிரதேச செயலகத்தில் கைத்தொழில் வலயம் அமைப்பதன் மூலம மாத்தறை மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே நோக்கம் என்று பாராளுமன்ற உறுப்பினரும், மாத்தறை மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர் நிபுண ரணவக…

மாத்தறை மாவட்ட வெலிபிடிய பிரதேச செயலகத்தில் கைத்தொழில் வலயம் அமைப்பதன் மூலம மாத்தறை மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே நோக்கம் என்று பாராளுமன்ற உறுப்பினரும், மாத்தறை மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர் நிபுண ரணவக…