கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறையில் புதிய தளர்வுகள் – 2021.10.25

  • 14

இன்று நள்ளிரவு (25.10.2021) முதல் அமுலாகும் வகையில் மேலும் சில தளர்வுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பமிடப்பட்ட அறிக்கையிலேயே கீழ்க் குறிப்பிடப்பட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

திருமண மண்டபத்தின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 100 பேருக்கு மேற்படாமல் திருமண வைபவங்களில் கலந்து கொள்ளமுடியும். மேலும், திறந்த வெளி திருமண நிழ்வுகளில் 150 பேர் கலந்து கொள்ள முடியும் என்பதுடன், மதுபானம் பகிரப்பட அனுமதி இல்லை.

உணவகங்களின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 75 பேருக்கு மேற்படாமல் உணவருந்த அனுமதி மற்றும் திறந்த வெளியாயின் 100 பேருக்கு அனுமதி.

கூட்டங்கள் மற்றும் நிழ்வுகளில், மண்டபத்தின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 150 பேருக்கு மிகையாகாமல் கலந்துகொள்ள அனுமதி.

இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை அமுல் படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.

அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களிலும் விசேட மத வழிபாடுகளை நடாத்திச் செல்ல, புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பௌத்தர்கள் பௌர்ணமி நாட்களில் மற்றும் போதி பூஜையின் போது 50 பேரின் பங்குபற்றலுடன் வழிபாட்டில் ஈடுபட முடியும் என்றும், கத்தோலிக்க, இஸ்லாம் மற்றும் இந்து பக்தர்கள் விசேட மத வழிபாடுகளின் போது 50 பேரின் பங்குபற்றலுடன் கலந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்கள், சுகாதார பாதுகாப்பு மற்றும் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் குறித்து, தேவைப்பட்டால் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இன்று நள்ளிரவு (25.10.2021) முதல் அமுலாகும் வகையில் மேலும் சில தளர்வுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பமிடப்பட்ட அறிக்கையிலேயே கீழ்க் குறிப்பிடப்பட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன…

இன்று நள்ளிரவு (25.10.2021) முதல் அமுலாகும் வகையில் மேலும் சில தளர்வுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பமிடப்பட்ட அறிக்கையிலேயே கீழ்க் குறிப்பிடப்பட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன…