முன்னேறு

சுற்றி உள்ள இருட்டு
சூழ்ந்து விட்ட கருமை
மறைக்க வரும் மேகங்கள்
நெருங்கி வரும் கார்முகில்கள்

அத்தனையும் கடந்து விட்டால் பிராகாசிப்பது நீ மட்டுமல்ல!
உன்னை சுற்றி உள்ளதும்
உனக்காய் சுற்றி வருவதுமாகும்

தடைகளை தாண்டி விட்டால்
தடம் பதிப்பது நீ மட்டுமல்ல!
உச்சம் அடைய உயிர் கொடுத்தவரும்,
பிராகாசிக்க பிரார்த்தனை செய்தோருமாகும்.
தகர்த்தெறிந்து முன்னேறு
உனக்காய் அல்லாமல்
ஊக்குவித்தவருக்காய்!

SHIMA HAREES
UNIVERSITY OF PERADHENIYA