பற்கள் சொற்கள்

  • 17

பால் வயதிலே
பற்கள் முளைக்க
பள்ளி சென்று
பல்லாயிரம் சொற்களை
பக்குவமாய் உச்சரித்து
பாட்டுப் பாடி மகிழ
பாஷைகள் பரிமாற
பாவையாய் அழகு பொழிய
பாற் பற்களுக்கு
பலம் தேவை!

காலை மாலை தினம்
உணவுண்ட பின் நிதம்
பல் துலக்கி சுத்தி செய்து
பல்லீறுகள் நீக்கி போக்கி
சிரித்து சிந்தித்து வாழ்ந்தால்
முற்றம் எங்கும் மணக்கும்
வீடே மல்லிகைப் பந்தல்!
அன்றேல் மனது கனக்கும்
வீடே துயரின் விம்பம்!

பல்லுப் போனால்
சொல்லும் போகும்!
கண்ணும் கருத்தும்
அதிகம் கொண்டு
ஆரோக்கியம் பேணி
அழகு காத்து
வாழ்ந்திட வேண்டும்!
வாழ்வில் வளம் சேர்க்கும்
பற்கள் சொற்கள்!

கவியரசி எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா
பஸ்யால

பால் வயதிலே பற்கள் முளைக்க பள்ளி சென்று பல்லாயிரம் சொற்களை பக்குவமாய் உச்சரித்து பாட்டுப் பாடி மகிழ பாஷைகள் பரிமாற பாவையாய் அழகு பொழிய பாற் பற்களுக்கு பலம் தேவை! காலை மாலை தினம்…

பால் வயதிலே பற்கள் முளைக்க பள்ளி சென்று பல்லாயிரம் சொற்களை பக்குவமாய் உச்சரித்து பாட்டுப் பாடி மகிழ பாஷைகள் பரிமாற பாவையாய் அழகு பொழிய பாற் பற்களுக்கு பலம் தேவை! காலை மாலை தினம்…