அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி

  • 11

கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வெள்ளை சீனி மற்றும் சிவப்பு சீனி என்பவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை இந்த வர்த்தமானியினூடாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கோதுமை மா, பால் மா மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட 17 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகப்பட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வர்த்தமானியும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நுகர்வோர் அதிகாரசபையினால், இதற்கு முன்னர் வெளயிடப்பட்டிருந்த 07 வர்த்தமானி அறிக்கைகள் இந்த புதிய வர்த்தமானி அறிக்கையினூடாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி மைசூர் பருப்பு, பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன் என்பற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை, 2020 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட கோழி இறைச்சி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த அதிகப்பட்ச சில்லறை விலை, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் திகதி கருவாடு, தேங்காய், உலர்ந்த மிளகாய், மாசி உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில்லறை விலை.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கடலை, கோதுமை மா, இறக்குமதி செய்யப்படும் பால் மா என்பற்றுக்காக அதிகப்பட்ட சில்லறை விலையும் நீக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உலர்ந்த நெத்தலி, பாசி பயறு, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு என்பவற்றுக்கான அதிகப்பட்ச சில்லறை விலையும் நீக்கப்பட்டுள்ளதாக அற்த வரத்தமானயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

[pdfjs-viewer url=”https%3A%2F%2Ftamil.lankanetnews.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F11%2F2252-31_T.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வெள்ளை சீனி மற்றும் சிவப்பு சீனி என்பவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை இந்த வர்த்தமானியினூடாக இரத்து செய்யப்பட்டுள்ளது. சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம்,…

கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வெள்ளை சீனி மற்றும் சிவப்பு சீனி என்பவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை இந்த வர்த்தமானியினூடாக இரத்து செய்யப்பட்டுள்ளது. சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம்,…