வாக்காளராக பதிவு செய்ய ஆதன உரித்துரிமை அவசியமில்லை

2021 யூன் மாதம் 01 ஆம் திகதியன்று சாதாரண வதிவைக் கொண்டுள்ள முகவரியில் வாக்காளராக பதிவு செய்துகொள்வதற்கு தகைமையுள்ள அனைத்துப் பிரஜைகளுக்கும் உரிமை உண்டு.

வாக்காளர் ஒருவராகப் பதிவு செய்துகொள்வதற்காக 2021 யூன் 01 ஆம் திகதியன்று சாதாரண வதிவைக்கொண்டிருத்தல் போதுமானதென்பதோடு ஆதனம் தொடர்பான உரித்துரிமை பற்றி கவனம் செலுத்தப்பட மாட்டாது. வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் வசிக்கும் குடியிருப்பாளர்களைப் போன்றே அதிகாரமற்ற குடியிருப்பாளர்களும் ஏனைய தகைமைகளைப் பூர்த்தி செய்வார்களாயின் அவர்கள் சாதாரணமாக வசிக்கும் முகவரியில் வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள முடியும்.

இதற்காக ஆதன உரிமையாளர்களின் விருப்பமோ இணக்கப்பாடோ அவசியமில்லை. பிரஜையொருவரின் பராதீனப்படுத்த முடியாத இறைமை அதிகாரத்தில் வாக்குரிமையும் உள்ளடக்கப்படுவதுடன், வாக்குரிமையை செயல்வலுப்பெறச் செய்வதற்காக தேருநர் (வாக்காளர்) இடாப்பில் பெயர் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும். வாக்காளர் ஒருவராக பதிவு செய்துகொள்வதற்காக பிரஜைகளுக்கு இடையூறு செய்தலானது நீதிமன்றமொன்றினால் தண்டனைக்கு அல்லது சிறைத் தண்டனைக்கு அல்லது இவ்விரண்டு தண்டனைகளுக்கும் உட்படுத்தப்பட முடியுமான தவறாகும்.

வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அல்லது அதிகாரமற்ற குடியிருப்பாளர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ளலானது பிரஜைகளின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதற்காக மாத்திரமே என அறிவிப்பதோடு அப்பதிவு ஆதன உரித்துரிமையை அல்லது நிரந்தர வதிவை உறுதிசெய்து கொள்வதற்கல்லவெனவும் வலியுறுத்துகின்றேன்.

இந்தப் பிரச்சினை காரணமாக இதுவரை வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்வதற்கு முடியாதிருக்கும் நபர்கள் இருப்பின் 2021.11.17 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திற்கு உங்களுடைய உரிமைக் கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும்.

குறித்த உரிமைக் கோரிக்கைகளுக்கான விண்ணப்பப் படிவத்தை அனைத்து கிராம அலுவலர் அலுவலகம், பிரதேச செயலகம், உள்ளூராட்சி நிறுவனம் என்பவற்றிலிருந்து அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு www.elections.gov.Ik எமது இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொன்னவும் முடியும். இது சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 0112860031,0112860032 0112860034 ஆம் இலக்க தொலைபேசி இலக்கங்களின் ஊடாக எமது தொலைபேசி உதவி நிலையத்துடன் தொடர்புகொண்டு அவற்றை முன்வைக்க முடியுமென தயவாய் அறியத் தருகின்றேன்.