2022 நிதி ஒதுக்கீடுகள் ஒரே பார்வையில்

  • 16

ஷம்ஸ் பாஹிம்,லோரன்ஸ் செல்வநாயகம்

  1. அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க ரூ. 30,000 மில்லியன்.
  2. மின்சார கட்டணம் 10 சதவீதம் குறைப்பு
  3. சிகரட் மற்றும் மதுபான விலைகள் அதிகரிப்பு
  4. அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயது 65 வயதாக அதிகரிப்பு
  5. சகல பட்டதாரிகளுக்கும் 2022 ஜனவரி மாதத்துக்குள் நிரந்தர நியமனம் – ரூ. 7,600 மில். மேலதிக நிதி
  6. 2015- – 2019 காலத்தில் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு நஷ்டஈடு வழங்க ரூ.100 மில்.மேலதிக நிதி
  7. காணாமல் போனோருக்கு நஷ்டஈடு வழங்க 300 மில்.மேலதிக நிதி
  8. 03 வருடங்களுக்குள் தோட்ட லயன் குடியிருப்புக்களை அகற்றி தனி வீடுகளை உருவாக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்க முன்மொழிவு
  9. ஆட்டோக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.700 மில். மற்றும் தனியார் பஸ்களுக்காக 1,500 மில்.நிதி ஒதுக்கீடு
  10. கர்ப்பிணிப் பெண்களின் போசாக்கு பொதி 24 மாதங்களுக்கு வழங்க 1,000 மில்.மேலதிக நிதி ஒதுக்கீடு.
  11. கிராம சேவகர் மட்டத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி
  12. எம்.பிக்கள் ஓய்வூதியம் கிடைக்கும் காலத்தை 05 வருடங்களிலிருந்து 10 வருடங்களாக அதிகரிக்க யோசனை
  13. ஜனாதிபதியின் ஓய்வூதிய காலமும் அதிகரிப்பு
  14. அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் மீள ஆரம்பம். ஆரம்ப ஒதுக்கீடாக ரூ. 500 மில்.
  15. 200 மில்லியனுக்கு மேல் வருமானமுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து 25 வீத வரி
  16. விபத்து கட்டணம் அறவிட யோசனை
  17. ஓய்வூதிய முரண்பாட்டை நீக்க புதிய சம்பள கட்டமைப்பு அறிமுகம்
  18. புதிய அரச அலுவலக கட்டட நிர்மாணிப்புகள் 02 வருடங்களுக்கு ஒத்திவைப்பு
  19. அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க புதிய சம்பள கட்டமைப்பு அறிமுகம்
  20. ஏனைய அரச ஊழியர்களுக்கான சம்பள நிர்ணய முறை இலகுவாக்கப்படும்
  21. தகுதியான சமுர்த்தி பயனாளர்களை தெரிவு செய்வதற்கு புதிய முறை அறிமுகம்
  22. பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையில் சமுர்த்தி திட்டத்தை கிராம அபிவிருத்தி திட்டமாக மாற்றல்
  23. அரச நிறுவன தொலைபேசி செலவை 25 வீதத்தினால் குறைக்க நடவடிக்கை
  24. அரச நிறுவனங்களின் செலவீனங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் தனித் தனியாக ஒதுக்கப்படும்
  25. நேரடியான வருமானத்தை ஈட்டுவதற்கு பயன்படாத சொத்துக்களை பயன்படும் வகையில் மாற்றுதல்.
  26. அரசுக்கு உரிமையுள்ள ஊடக நிறுவனங்களின் வர்த்தக நிதி ஒழுங்கை மேம்படுத்த மூலோபாய திட்டம்
  27. தொலைத் தொடர்பு பரிவர்த்தனை கட்டமைப்பை விஸ்தரித்து சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இன்டர்நெட் வசதி
  28. தொலைக்காட்சி மற்றும் வானொலி உரிமங்களை திறந்த ஏலவிற்பனையில் வழங்க யோசனை
  29. முச்சக்கர வண்டி மேற்பார்வைக்கு தனியான அதிகாரசபை
  30. ஓய்வூதியம் பெறாத சிரேஷ்ட பிரஜைகளுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம்.
  31. இளைஞர்களை தொழில்முயற்சிகளுக்கு ஊக்குவிப்பதற்கு பதிவுக் கட்டணம் நீக்கம்
  32. சகல மாவட்டங்களிலும் நவீன பாடசாலை மற்றும் ஆஸ்பத்திரி அமைக்க யோசனை
  33. புதிய விசேட பண்ட வரி எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு
  34. அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் மானியம் 05 லீற்றரால் குறைப்பு.
  35. ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க ரூ.500 மில்.மேலதிக நிதி
  36. இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு பயிரிடப்படாத நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாயிகளை உருவாக்க யோசனை
  37. சேதன பசளை உற்பத்தி திறனை அதிகரிக்க கிராமிய மட்டத்தில் திட்டம்.35,000 மில்லியன் ஒதுக்கீடு
  38. புகையிரத திணைக்களத்தால் திறம்பட பயன்படுத்தப்படாத காணிகளை கலப்பு அபிவிருத்திக்காக பயன்படுத்த நடவடிக்கை
  39. பால் உற்பத்தியை ஊக்குவிக்க மேலும் ரூ.1,000 மில்.ஒதுக்கீடு
  40. 2024 இல் 90 வீதமானவர்களுக்கு குடிநீர்வசதி அளிக்க மேலும் ரூ15,000 மில்.ஒதுக்கீடு
  41. வீதி அபிவிருத்திக்கு மேலும் ரூ. 20 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு
  42. கிராமிய வீடுகளுக்கு 2000 மில். நகர வீடுகளுக்கு 5000 மில். ஒதுக்கம்
  43. 14,021 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 3 மில்லியன் வீதம் 42,063 மில். ஒதுக்கல்
  44. எம்.பிகளுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கு தலா 5 மில்.மேலதிக நிதி ஒதுக்கீடு
  45. நுண்,சிறு மற்றும் மத்திய தர வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.5000 மில்.ஒதுக்கல்
  46. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பாடசாலை வேன்களுக்கு சலுகை வழங்க ரூ.400 மில்.
  47. ஒரு ஹெக்டெயாருக்கு 5,000 ரூபா வீதம் அதிகபட்சமாக இரண்டு ஹெக்டயாருக்கு மானியம்.
  48. நீதிமன்ற கணினிமயாமாக்கல் திட்டத்திற்கு மேலதிகமாக ரூ.5,000 மில்.ஒதுக்கல்
  49. பொலிஸ் சேவைக்கு ரூ. 500 மில்.மேலதிக நிதி ஒதுக்கீடு
  50. கைதிகளுக்கு சுகாதார பாதுகாப்பிற்காக ரூ.200 மில்.மேலதிக நிதி
  51. மனைப்பொருளாதார பாதுகாப்பிற்காக ரூ.31,000 மில்லியன் ஒதுக்கீடு.
  52. 14,021 ஹோம் ஷொப் அமைக்க ரூ. 15,000 மில்.ஒதுக்கம்
  53. அரச சேவையை கணினி மயப்படுத்த 500 மில்.மேலதிக நிதி

வருமானம் ஈட்டும் வழி

  1. வங்கி நிதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து அறவிடும் வற் வரி 18 வீதமாக அதிகரிப்பு (ஒருதடவை மட்டும் 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை அறவீடு
  2. சமூக பாதுகாப்பு பங்களிப்பாக ரூ.120 மில்லியனுக்கு மேல் வருமானம் ஈட்டுவோரிடமிருந்து வரி அறவீடு
  3. சிகரட் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு
  4. கலால் வரி அதிகரிப்பு.25 பில்லியன் வருமானம் எதிர்பார்ப்பு
  5. துறைமுகத்திலுள்ள வாகனங்களை நஷ்டஈடு மற்றும் வரி அறவிட்டு விடுவிக்க முடிவு
  6. திறைசேரி முறி முறைகேட்டுடன் தொடர்புள்ள பேர்பசுவல் டிசரியின் 8.5 பில்லியன் நிதியை திறைசேரிக்கு பெற முடிவு

ஷம்ஸ் பாஹிம்,லோரன்ஸ் செல்வநாயகம் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க ரூ. 30,000 மில்லியன். மின்சார கட்டணம் 10 சதவீதம் குறைப்பு சிகரட் மற்றும் மதுபான விலைகள் அதிகரிப்பு அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயது…

ஷம்ஸ் பாஹிம்,லோரன்ஸ் செல்வநாயகம் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க ரூ. 30,000 மில்லியன். மின்சார கட்டணம் 10 சதவீதம் குறைப்பு சிகரட் மற்றும் மதுபான விலைகள் அதிகரிப்பு அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயது…