பாடசாலை முழுமையாக ஆரம்பிக்கும் திகதி

பாடசாலைகளின் ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதமான இன்றைய தினத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு (தரம் 1 – 5) கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது

அதனைத் தொடர்ந்து தரம் 10 – 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 08ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய தற்போது தரம் 6 – 9 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.