அன்பு

கதிரவன் தன் இறக்கையை
காலையில் விறிக்கையில்
காலைக்கடனை நான்
கடந்திருக்கவேண்டும்

சூரியன் உச்சம் கொடுக்கையில்
சுற்றுச்சூழலை முழுதாய்
சுத்தம் செய்து
சிறப்பாய் உணவுண்ண
மேசைக்கு சென்றிருக்க வேண்டும்

துளித்துளி மழையை
துச்சமாய் நினைக்காமல்
தூதுவன் அனுப்பும் காதலாய்
துள்ளிக்குதித்துக் கொண்டாடி
தெம்பாய் இருக்கவேண்டும்

அந்திவானின் அற்புதம் கண்டு
ஆயிரம் கவிதை வடிக்கவேண்டும்
இவ்வுலகை நிலைபெறச்செய்யும்
ஈரமான அன்பை
உலகெங்கும் பரப்பவேண்டும்

Binth Ameen
Author: admin