கண்ணீரில் கரைந்த கனவுகள்

  • 28

பாடசாலை சீருடையில் சென்ற நட்சத்திரங்கள்
கபன் உடையுடன் திரும்புகையில்
பெற்ற இதயங்கள் குமுறுகின்றன
தாம் ஈன்ற நல் உள்ளங்களை காணுகையில்
உலகம் மறந்து – உறக்கம் கொள்கிறது
அப் பச்சிளம் சிட்டுக்கள்

பச்சிளங்களின் மிச்சங்கள்
பதற வைக்கிறது
பெற்றெடுத்த மனங்களை
ஆயிரம் கனவுகளுடன்
பறந்த சிட்டுக்கள் – பாதி வழியில்
பரிதவிக்க வைத்தது – பெற்ற மனம்
பாரபட்சமின்றி துடிதுடிக்கிறது

விருட்சங்கள் – விதைகளை நட்டு விட்டு
துயில் கொள்ள நினைக்கையில்
நாளைய தலைமுறையின் தலையெழுத்து
இங்கு தலை சீவப்படுகிறது
வரலாறும் வருத்தப்படும் – கண்ணீர் விட்டு
உமை பிரிந்ததற்கு

அரசியலென பன்முக
முகங்கொண்ட முகங்கள்
மக்களின் லட்சங்களை எண்ணும் அரசியல்வாதிகளின் மத்தியில்
பிஞ்சுக்களின் லட்சியங்களை
பஞ்சென பறக்க விட்டன

பெத்த மனங்களின்
கண்களில் வடிந்தோடுகிறது
பிஞ்சுக்களின் கனவுகள்
கண்ணீர்த் துளிகளாக
புரட்டிப் பார்க்க ஆளில்லாமல்
தனிமையில் கிடக்கிறது
பிஞ்சுக்களின் புத்தகங்களும்
அவைகளிடம் யார் போய் சொல்வர்
உனை சுமக்கும் பிஞ்சுக்களின் கரங்கள்
உறங்கி விட்டன என்று

படகில் பயணித்த இந்தப்
பிஞ்சுக்களின் பாதணிகள் தான்
இனியும் – பல லட்சம் கதைகள் பேசும்
எமது குடும்பத்தில் கஷ்டங்களை
இனியாவது – இந்த உலகம்
திரும்பிப்பார்க்குமா என்று
எழுதக் காத்திருக்கின்றன
அவர்களது பேனா முனைகள்

𝑺𝒉𝒂𝒉𝒏𝒂 𝑺𝒂𝒇𝒘𝒂𝒏

பாடசாலை சீருடையில் சென்ற நட்சத்திரங்கள் கபன் உடையுடன் திரும்புகையில் பெற்ற இதயங்கள் குமுறுகின்றன தாம் ஈன்ற நல் உள்ளங்களை காணுகையில் உலகம் மறந்து – உறக்கம் கொள்கிறது அப் பச்சிளம் சிட்டுக்கள் பச்சிளங்களின் மிச்சங்கள்…

பாடசாலை சீருடையில் சென்ற நட்சத்திரங்கள் கபன் உடையுடன் திரும்புகையில் பெற்ற இதயங்கள் குமுறுகின்றன தாம் ஈன்ற நல் உள்ளங்களை காணுகையில் உலகம் மறந்து – உறக்கம் கொள்கிறது அப் பச்சிளம் சிட்டுக்கள் பச்சிளங்களின் மிச்சங்கள்…