அவள் தான் என் தாய்

  • 11

அன்பில் தான் கண்ட உருவம் இழக்க
தானும் தனி என உணர
அவளும் தன் நினைவை இழக்கிறாள்
அவள் தான் என் தாய்

உலகம் அறியாது
என்னவன் தான்
உலகம் என வாழ்ந்தவள்
உலகை கண்டதும் உடைந்து போனாள்
கிணற்றுத் தவளையாய் வாழ்தவள்

கணவனே கண் கண்ட
தெய்வம் என உணர்தவள்
உலகை அறியாது
தன் நினைவை இழக்கிறாள்
அவள் தான் என் தாய்

பாசத்திற்கு அடிமை
அன்புக்கு இழக்கனம்
அவள் கடைசியில் பைத்தியம்
பைத்தியத்திற்கு வைத்தியம் காண
பல வைத்தியர் நாடினாலும்
ஈடாகவில்லை அன்னவளின்
கணவனின் பாசத்திற்கு

சிறை கைதியாய்
பல நாள் அவள் பூட்டப்பட
அவள் பிள்ளைகள் அன்பிழந்த
கயிறுகளால் கட்டப் பட
அவளும் உணரவில்லை
உன்னத உணர்வுகளை

உறவுகள் என உறவு
கொள்ள முடியவில்லை
பிள்ளை என சொந்தம்
கூற முடியவில்லை
இறுதியில் அவளும்
சொந்தம் துறந்து சென்றாள்
இறைவனின் சோலைக்கு
அவளும் ராஜ குமாரி தான்
இறைவனின் அரண்மனையில்

F.Aysha Saffar

SEUSL

Southern

அன்பில் தான் கண்ட உருவம் இழக்க தானும் தனி என உணர அவளும் தன் நினைவை இழக்கிறாள் அவள் தான் என் தாய் உலகம் அறியாது என்னவன் தான் உலகம் என வாழ்ந்தவள் உலகை…

அன்பில் தான் கண்ட உருவம் இழக்க தானும் தனி என உணர அவளும் தன் நினைவை இழக்கிறாள் அவள் தான் என் தாய் உலகம் அறியாது என்னவன் தான் உலகம் என வாழ்ந்தவள் உலகை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *