அஹ்னாபிற்கு பிணை வழங்க எதிர்ப்பில்லை

  • 13

நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு நூலை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு பிணையளிக்க எதிர்ப்புக்களை முன்வைக்கப் போவதில்லையென உயர் நீதிமன்றத்துக்கு சட்ட மாஅதிபர் (08.12.2021) அறிவித்தார்.

அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்டவிரோதமானதெனக் கூறி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு (8) பரிசீலனைக்கு வந்தபோது, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே குறிப்பிட்டார்.

மனு மீதான பரிசீலனைகள்(08) உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துறைராஜா தலைமையிலான குமுதினி விக்ரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது, மனுதாரரான அஹ்னாப் ஜஸீம் சார்பில் நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.எம். இல்யாஸ், சட்டத்தரணிகளான சஞ்சய வில்சன் ஜயசேகர, லக்ஷ்மனன் ஜயகுமார், ஸ்வஸ்திகா அருலிங்கம், தரிந்து ரத்நாயக்க ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கணக. ஈஸ்வரன் ஆஜரானார்.

இதன்போது மனுவின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளே, அஹ்னாப் ஜஸீமுக்கு புத்தளம் மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு முன் வைக்கப்பட்டுள்ள பிணை கோரிக்கைக்கு சட்ட மாஅதிபர் எதிர்ப்புகளை முன் வைக்க போவதில்லையென தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார். அந்த வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி அங்கு விசாரணைக்கு வருவதாகவும் அவர் கூறினார்.

நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு நூலை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு பிணையளிக்க எதிர்ப்புக்களை முன்வைக்கப் போவதில்லையென உயர் நீதிமன்றத்துக்கு…

நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு நூலை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு பிணையளிக்க எதிர்ப்புக்களை முன்வைக்கப் போவதில்லையென உயர் நீதிமன்றத்துக்கு…