• 11

டொலர்களை தம் கையிருப்பில் வைத்திருப்பவர்களுக்கு மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி குறித்த டொலர் அல்லது அந்நிய செலாவாணிகளை மத்திய வங்கி அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வங்கிகளின் ஊடாக அவற்றை இலங்கை ரூபாவுக்கு மாற்றுமாறு கோரப்பட்டுள்ளது.

அல்லது ஏதேனும் வங்கியிலுள்ள இலங்கை ரூபா கணக்கில் வைப்பிலிடுமாறு அல்லது உங்களது தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் (PFCA) அல்லது சிறப்பு வைப்புக் கணக்கில் (SDA ) வைப்பிலிடுமாறு ; உங்களது வங்கியூடாக இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் இவற்றுக்காக ஊக்குவிப்புத் தொகை ஒரு டொலருக்கு 10 ரூபா வீதம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் டொலர் இருப்பு குறைந்துள்ள நிலையில் அதனை ஈடு செய்வதற்கு டொலர்களை பெற்றுக்கொள்ள மத்திய வங்கி திட்டமிட்டுள்ள புதிய நுட்பம் இதுவாகும்.

டொலர்களை தம் கையிருப்பில் வைத்திருப்பவர்களுக்கு மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த டொலர் அல்லது அந்நிய செலாவாணிகளை மத்திய வங்கி அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வங்கிகளின் ஊடாக அவற்றை இலங்கை ரூபாவுக்கு மாற்றுமாறு…