வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் சம்பள நிலுவைகளை வழங்க உத்தரவு

  • 10

சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பணியில் மீள இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கடந்த 2019, மே 24ஆம் திகதி முதல் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதிலிருந்து அவருக்கான சம்பளத்தை வழங்க நடவடிக்கைமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச். மூனசிங்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்டாய விடுமுறையில் அனுப்பப்படும் அதிகாரி ஒருவர் தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில், தாபன விதிக்கோவையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், குறிப்பிட்ட காலப் பகுதிக்கான சம்பளத்தை வழங்காமை தொடர்பான காரணத்தை, தாமதிக்காமல் தனக்கு அறிவிக்குமாறு, சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைக் குழு செயலாளரின் 2019 ஜூன் 19ஆம் திகதி எழுதப்பட்ட கடிதத்திற்கு தாபன விதிக்கோவை XII: 20.2 இற்கு அமைய குறித்த நிலுவைகளை வழங்குமாறு குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பணியில் மீள இணைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கடந்த 2019,…

சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பணியில் மீள இணைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கடந்த 2019,…