பல்கலைக்கழக தரப்படுத்தலில் முதலிடம் பேராதெனியா நான்காமிடம் தென்கிழக்கு

யு. ஐ. கிரீன்மெட்ரிக் தரவரிசையில், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நான்காவதும், உலகளாவிய ரீதியில் 318 வது நிலையையும் பெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள ஏழு (07) பல்கலைக்கழகங்கள் இந்த தரப்படுத்தலில் பங்குபற்றியபோதும், தென்கிழக்கு பல்கலைக்கழகம் 6575 புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது. எனினும் இலங்கையில் முதுமையான பல்கலைக்கழங்களான ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தலா ஐந்தாம், ஆறாம், ஏழாம் இடங்களினை பெற்றுள்ளன.

தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தராக பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கடமையேற்று குறுகிய காலத்தில் இளமையான (25 ஆண்டுகள் கடந்துள்ள) 06 பீடங்களை கொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் 04ம் நிலை பெற்றுள்ளமையானது இப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும், அபிவிருத்தி மேன்மைப்படுத்தப்பட்டிருப்பது பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.

அப்பட்டியலில் பேராதெனியா பல்கலைகழகம் முதலாமிடமும், களனி பல்கலைகழகம் இரண்டாமிடமும் மூன்றாவது இடத்தை கொழும்பு பல்கலைக்கழகமும் பெற்றுக்கொண்டுள்ளது.