வருடமொன்று பிறப்பதனால்
வாழ்க்கை இங்கு மாறிடுமோ
ஒவ்வொரு விடியலும்
புதுப் பிறப்பே
அதை உணர்ந்து நடந்தால்
வரும் சிறப்பே
ஒவ்வொரு நொடியும்
உனக்கானதே அதில்
மனதினை பண்படுத்தல்
நலமாகும்
ஒவ்வொரு நபரும் தனிவகையே
அவரிடம் நல்லன காணல்
நற் பண்பாகுமே
வருடமொன்று பிறந்ததென்று
வாழ்வில் இன்று
வசந்தங்கள் வருவதில்லை
வாழும் நொடி புனிதம் என்று
வாழ்க்கை யொரு வரம் என்று
உணர் பொழுது
உதிக்கும் வரை
வருடமொன்று பிறந்ததென்று
வாழ்க்கையிங்கு மாறுவதில்லை