இரத்தினபுரி கலபட தமிழ் வித்தியாலயத்தில் 2022.01.25 ம் திகதியான இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் கே. தினேஷ் தலைமையில் வெகுவிமர்சையாக பொங்கல்விழா கொண்டாடப்பட்டது.
சித்திரப்போட்டி, கோலப்போட்டி, கயிறு இழுத்தல் என பல போட்டி நிகழ்வுகள் விருவிருப்பாக நடந்தேறின.
விருவிருப்பாக நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மத முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் பல இன்னோரன்ன கலைநிகழ்வுகள் அரங்கேறியது.