பட்டாம் பூச்சி

Binth Ameen
SEUSL
2015/16 Batch
FAC

பாடசாலைக் கல்வியை
பற்றிப்பிடித்ததெல்லாம்
பல்கலைக்கு அடியெடுத்து
பசுமைநாட்களை
பெற்றுக் கொண்டாடவே

கனவின் மயக்கமோ என
கிள்ளிப்பார்க்கத்தோணுமளவு
கற்ற கல்விக்காய்
கலைப்பீட பட்டமளிப்புவிழா
கலையக அங்னியிலே
கச்சிதமாய் அரங்கேறியது

காத்திருப்பு கைகூட
கனாக்களும் நிறைவேற
கொண்டாட்டம்தான் எங்களுக்கு
கல்விக்கு முடிசூட்டிய நாள் நமதே

உபகுலபதியாய் ரமீஸ் சேர்
இதைத்தாண்டி வேறென்ன
இன்பம் எமக்கு
உற்சாகம் எம்மில் ஊற
அவர்கையால் பட்டங்களை
அன்பூறப்பெற்றோம்

புதுமணப்பெண் உட்பட
புதுயுகக்கண்கள்
பட்டம் பெற வரிசையாய்
பாரினில் வலம்வர
பெற்றோர்கள் சிறகடித்துப்
பறக்கின்றனர்
பெருமைகொண்டு நம்மை
பெற்ற சந்தோஷத்திலே

நல்ல நட்புக்கள்
நாலாபக்க உறவுகள்
நல்ல நாளில் சேர்ந்த களிப்பில்
எண்ணிலடங்கா புகைப்படங்கள்
உணர்ச்சிவசப்படும் நற்பொழுதுகள்

பிரசவ வலியிலும்
பிறந்த குழந்தையுடனும்
பிறநாட்டிலிருந்து ஓடிவந்து சேர்ந்த
பிரமிப்பிலுமென
பட்டதாரிகளுக்குப் பின்னால்
பலகதைகள் பொக்கிஷமாக

பட்டம் சூட
பாவை நான் பரவசம்கொள்ள
பெற்றவள் கண்குளிர்ந்த
பொன்நாள் இது எனக்கு
பல்லாயிரம் நினைவலைகள்
பட்டாம்பூச்சியாய் இன்னும்
பறந்துகொண்டிருக்கிறது

Tags: