பெண்மையைப் போற்றுவோம்

உலகிலே மான்பு மிக்க
மனித இனம் பெண் தான்
மாற்றும் மிக்க பெண்கள்.

மாறும் இந்த உலகிலே
இதுவரை மாறாத ஒரே ஒரு
இறைவனின் படைப்பு பெண்

மாறாக் கல்நெஞ்சங்களையும்
மாற்றத்தக்க மனதாக
மாற்றுவது பெண்

மாற்றுமையின் உச்சம் பெண்
மாசில்லா இறைப் பிரதிநிதி பெண்

உயிரை உலகிற்கு தரிவிக்கும்
உத்தம படைப்பு பெண்
கருவை சிசுவாய்ப்
பிரசிப்பவள் பெண்.

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடையே போராடி
இறைவனின் படைப்பான – தன்
குழந்தையை உலகைக்
காணச் செய்வாள் பெண்

பகைவனைக் கூட பாசம் கொண்டு
பணியவைப்பாள் பெண்
பக்குவம் என்ற சொல்லிற்கே
பரினமித்தவள் பெண்

தியாகம் அதன்
திரு வடிவம் பெண்
பொறுமை அதற்கே – தன்னை
பொறுப்பானவள் பெண்

அடக்கம் என்பதை
ஆடையாய் அணிந்தவள் பெண்
ஒழுக்கம் எனும் வேலி கொண்டு
குற்றம் தவிர்ப்பவள் பெண்

வெட்கம் என்னும்
வெண்மை பூசியவள் பெண்
வெறுப்பு என்பதனை
தூரவைத்து வாழ்வாய் பெண்

வெற்றி என்பதனை
முடிசூட வைப்பவள் பெண்
ஆணிற்கு புகழ்ச்சிகள்
பல சூழ ஒரு பெண்ணாய்
பல இகழ்ச்சிகளை
சூழவைத்துக் கொள்வாள் பெண்

தாய்மை என்றால் பெண்
தன் மானம் என்றால் பெண்
தண் அது பெண்
தன்னடக்கம் அவளே பெண்

பெறுமை தவிர்ப்பாய் பெண்
பொறுமை கொள்வாள் பெண்
போட்டி போடுவாள் – பெண்
பொறாமை கொள்ளமாட்டாள் பெண்

கர்வம் கழைவாள் பெண்
கண்ணீர் துடைப்பாள் பெண்
தட்டிப் பறிக்க மாட்டாள் பெண்
தட்டிக் கொடுப்பாள் பெண்

தலைக்கனம் அற்றவள் பெண்
தலைகுணிந்தே வாழ்வில்
தலை நிமிர்வாள் பெண்

பாரபட்சம் பாராதவள் பெண்
பணிவைக் கைக்கொள்வாள் பெண்

அதிகாரம் தவிர்ப்பாளே பெண்
அடக்கம் கொண்டவள் பெண்

விட்டுப் பிரிய மாட்டாள் பெண்
விட்டுக் கொடுத்து வாழ்வார் பெண்

பிடிவாதம் பிடிக்காதவள் பெண்
பிடித்ததையும் பிறர்
மனவிருப்பத்திற்காய்
இழந்து நிற்பாள் பெண்

எத்தனை ஆயிரம்
சிறப்புக்கள் பெண்ணில்
அத்தனையும் சொல்லி முடிக்க
சொற்கள் போதவில்லையே என்னில்

உலக தினங்கள் இத்தனை
இருந்தும் ஏன் ஒரு
தினத்தில் மாத்திரம்
பேசப்படுகிறார் பெண்

அத்துனை தினமும்
கொண்டாடப் பட
வேண்டியவர்களே – பெண்
எதிலும் உலகில்
அனைத்திலும் பெண்

நம்மை சுமக்கும்
பூமித்தாய் கூடப் பெண்.
வாரீர் மக்களே!
அத்துனை பெண்
தியாகிகளையும் போற்றுவோம்.

ஹுஸைன்தீன் பாத்திமா பாதுஷா
இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக்கழகம்
இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடம்
Tags: