காற்பந்தால் கால்பதித்த கலைபீட மாணவன் மொஹமட் ஜுனைட் ரொஷான் அஹமட்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் துறை இறுதிவருட மாணவனான மொஹமட் ஜுனைட் ரொஷான் அகமட் மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்டவர். பாடசாலைக் கல்வியை மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலையில் பயின்ற இவருக்கு சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்துறை என்றால் அலாதிப்பிரியம் .

ஆரம்ப பாடசாலை நாட்களில் ஓட்டம், தடைதாண்டல் போட்டி, நீளம் பாய்தல் என மெய்வல்லுனர் போட்டிகளில் விஷேட திறமை காட்டினார். மேலும் முதன் முறையாக 2013ம் ஆண்டு ரொஷானை தலைவராய் கொண்ட பாடசாலை கரப்பந்தாட்ட அணி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை தட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாகாண மட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளில் அடிக்கடி பங்குகொண்டு வெற்றி சூடும் இவர் 2013 மற்றும் 2016 ம் ஆண்டுகளில் பாடசாலை உதைப்பந்தாட்ட அணித்தலைவராய் செயற்பட்டு இரு தடவை இவரின் தலைமையிலான பாடசாலை அணி மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று தேசிய ரீதியில் பங்கு கொண்டமை விஷேட அம்சமாகும்.

மருதமுனை கோல்ட்மைன் விளையாட்டுக்கழக முன்வரிசை வீரரான ரொஷான் அஹமடின் விளையாட்டுத்திறமை கண்டு 2016 ம் ஆண்டு கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சாதனையாளர் விருது சூடப்பட்டமையும் 2019 ம் ஆண்டு கழகங்களுக்கிடையிலான சுற்றுத்தொடரொன்றின் சிறந்த இளம் உதைப்பந்தாட்ட வீரருக்கான விருது வழங்கப்பட்டமையும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

2017 தேசிய விளையாட்டு விழாவில் இவரை தாங்கிய அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட அணி 2ம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் முதலாம் வருடத்திலேயே பங்கு பற்றிய இவருக்கு 2018 ம் ஆண்டு மொரட்டுவ உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டமையும் இவரின் சாதனையை காட்டி நிற்கின்றன எனலாம்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார துடிதுடிப்பான மாணவனான ரொஷான் 2019ல் பல்கலைக்கழக உதைப்பந்தாட்ட அணி ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல்கலைக்கழக உதைப்பந்தாட்ட அணியின் பிரதித் தலைவராக 2020ல் , 2020/21 ம் ஆண்டு மாணவப் பேரவை செயலாளராக என பலவடிவங்களில் பல்கலைக்கழக முக்கிய புள்ளியாய் செயற்பட்டுள்ளார்.

2019 ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பீடங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட சுற்றுத்தொடரில் இறுதிப்போட்டிடயில் இறுதி gaol இனை management பீடத்திற்கு எதிராக penalty முறையில் புகுத்தி கலை பீடத்தினை வெற்றி வாகை சூட ஒரு காரணமாய் அமைந்தார். 2021 ம் ஆண்டு பல்கலைக்கழக விளையாட்டுத்துறை பேரவையின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டது மட்டுமன்றி 2021/22 ன் பல்கலைக்கழக உதைப்ந்தாட்ட அணி மற்றும் கலைபீட உதைப்பந்தாட்ட அணியின் தலைவராக செயற்பட்டுவருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெறவிருக்கின்ற colors night – 2022 விருது வழங்கும் விழாவில் வீரர்களுக்கான உயர்விருதான colors விருதை மொஹமட் ஜுனைட் ரொஷான் அஹமட் சூடவுள்ளமை உண்மையில் கலைபீடத்துக்கு பெருமை சேர்த்த பாராட்டிப் போற்றப்படவேண்டிய மிகமுக்கிய விடயமாகும்.

பின்த் அமீன்
மாவனல்லை
Tags: