புலமை பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதனை படைத்த ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலம் – 2021 (2022)

2021 (2022) ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஜந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி வலயத்துற்குற்பட்ட ஏறாவூர் கோட்டத்தில் ஆரம்ப பாடசாலையான மட் /மம/ டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவி நெளபி பாத்திமா திக்ரா 190 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார் அம்மாணவிக்கும் பொற்றோருக்கும், கல்வியை ஊட்டிய ஆசிரியர்களுக்கும், அதிபருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேம் .

இப்பாடசாலை ஏறாவூர் கோட்டத்தில் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பிரிவு இறுதி பாடசாலையாகும். இப்பாடசாலையில் 2018 ஆம் ஆண்டு முதலாவது அறுவடையில் 90 மாணவர்கள் பங்குபற்றி 67% மான மாணவர்கள் சித்தியடைந்தனர் அதில் அடைவுமட்டத்தில் 6 மாணவர்கள் வெற்றி பெற்றார்கள்.

2019 ஆம் ஆண்டு 78 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 79% மான மாணவர்கள் சித்தி அடைந்து 8 மாணவர்கள் அடைவு மட்டத்தினை பெற்றிருந்தார்கள்.

2020 ஆம் ஆண்டு 78 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 88% மாணவர்கள் சித்தி அடைந்து அடைவு மட்டத்தினை 10 மாணவர்களும் அதில் 195 புள்ளிகளை சாய்வு முகமட் அஹ்சான் என்ற மாணவன் ஏறாவூர் கோட்டத்தில் சாதனை படைத்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

2021(2022) ஆண்டு தற்போது வெளியிடப்பட்டதில் 88 மாணவர்கள் பரீட்சைக்கு முகம் கொடுத்து 93% மாணவர்கள் சித்தி அடைந்து 10 மாணவரகள் அடைவுமட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் .

இப்பாடசாலையானது பெரும் போரட்டங்களுக்கும் பல தியாகங்களுக்கும் மத்தியில் நீதிமன்ற ஆனணயுடன் உருவாக்கப்பட்ட இப்படசாலைக்கு நீதி துறையுடன் பலரின் நேரடி மறைமுக ஒத்துழைப்பும் இன்றுவரை இப்பாடசாலை வளர்ச்சிக்கு காரண கர்த்தவாக காணப்படுகின்றது .

2013 ஆம் ஆண்டு தற்போதைய மட்/றகுமானியா தேசிய பாடசாலையை ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் உள்வாங்க பட்டதனால் ஆரம்ப பாடசாலை குறித்த பாடசாலையில் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஊட்டப்பாடசாலை ஒன்றை அமைக்க அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் இணைந்து 18 பேர் கொண்ட குழுவினரின் அயராத முயற்சியுடன் முன்னால் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் அவர்களின் எண்ணக்கருவில் உருவானது மட்/ மம/ டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம் .

இப்பாடசாலைக்கு காணியின்றி இருந்த போது தபால் தொலைதொடர்பு மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் முன்னால் செயலாளர் அல்ஹாஜ் அசனார் அப்துல் மஜீட் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக வாளியப்பா பள்ளிவாயலுக்கு இலங்கை வரலாற்றின் முதன் முறையாக விசேட நம்பிக்கையாளராக சமூக முன்னோடியும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஜனாப் ஜமால்தீன் முகமட் முஸ்தபா என்ற தனிநபர் ஒருவரை நியமித்து பள்ளிவாயல் காணி உறுதி தொடர்பான பிணக்கு சீர் செய்யப்பட்டு பாடசாலைக்கும் காணி வழங்கப்பட்டது .

இப்பாடசாலைக்கான கட்டிட வசதிகளை வழக்கிய முன்னால் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் , கிழக்கு மாகாண முன்னால் முதலமைசரும் தற்போதைய பாராளுமன்ற உறுபினருமான அல்ஹாபிழ் ZA நஷீர் அஹமட் , பாடசாலை தளபாடங்களை வழங்கிய கிழக்குமாகாண முன்னால் ஆளுநர் MLAM ஹிஸ்புல்லாஹ் , கிழக்கு மாகாண முன்னால் சுகாதார அமைச்சரும் தற்போதைய ஏறாவூர் நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் MS சுபைர் பிரதான நுழைவாயில் அமைத்து தந்த முன்னால் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹீர் மெளலானா அவர்களையும் நினைவு கூர்வதுடன் இப்பாடசாலைக்கான இடத்தினை உறுதிபடுத்திப்படுத்துவதற்கு ஆரம்ப கட்டிடத்தினை வழங்கிய திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் MIA வகாப்தீன் அவர்களையும் ஞாபகப்படுத்தியவர்களாகவும் .

பாடசாலை உருவாக்கதின் போது காணப்பட்ட மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளர் மர்ஹூம் U அஹமட் லெப்பை, ஆரம்ப கால மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கட்டிட பொறியலாளரும் ,தற்போதைய கிழக்கு மாகாண கல்வி திணைக கள கட்டிட பொறியலாளர் அலிமுஹமட் ஹக்கீம் அவர்களுக்கும் தற்போதைய மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் , ஏறாவூர் நகர சபை , ஆகியவற்றுடன் இப்பாடாசலைக்கு உதவிய, உதவிக் கொண்டிருக்கும் தனவந்தர்கள் , உள்ளூர் வெளியுர் ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் , முகநூல் ஏழுத்தாளர்கள் அனைவருக்கும் இப்பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்

ஹ.மு. நியாஸ்
செயலாளர் ,
பாடசாலை அபிவிருத்தி குழு,
மட்/ மம/ டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம்
ஏறாவூர் .