நீர்

இயற்கை எனும்
பச்சை கம்பளத்தில்
மூன்றில் இரண்டாய்
தனக்கென்று இடம்பதித்து

உய்யாரமாய் ஊடுறுவி
தாவரங்கள் தழைத்து
தாகம் தீர்க்க
உயிர்கள் நிலைத்திருக்க

விண்ணவனின் அருள்
விந்தையாய் வந்துதிக்க
வீணடிக்காதீர் நீரை
வீழ்வீர் நீரே!

அஸ்மா மஸாஹிம்
பாணந்துறை
Tags: