எண்ணெய் இன்றி

வீட்டுக்கு போ என
ஊர்மக்கள் கூச்சலிட்டால்
வீடு செல்ல முடியுமா
எண்ணெய் இன்றி

மனைவியோ
வீட்டுக்கு
வர வேண்டாம்
என்கிறாள்
எண்ணெய் இன்றி

மகனோ அமெரிக்காவில்
நான் வரிசையில்
எண்ணெய் இன்றி

எண்ணெய் உதவுவது போல்
அண்ணன் தம்பி உதவாதென
தனியாக வந்தேன்
தவிக்கையில்
எண்ணெய் இன்றி

Ibnuasad