சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

IFE நிறுவனத்தினால் நாடு பூராகவுள்ள க.பொ.த சாதரண தர மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் முகமாக நடாத்தப்பட்டு வரும் இலவச கருத்தரங்கு தொடரிலே இரண்டாவது கருத்தரங்கு 2022.04.16 அன்று நிகவெரட்டிய கல்வி வலய அபுக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடை பெற்றது.

இக் கருத்தரங்கின் வளவாளராக IFE நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் H.M SHAFNAZ (Cvili Engineering- ®) அவர்கள் கலந்து கொண்டார்.

அத்தோடு இக்கருத்தரங்கில் மேற்பார்வைக்காகவும் மாணவர் வாழிகாட்டல் அமர்வுக்காகவும் IFE நிறுவனத்தின் கௌரவ பணிப்பாளர் A.R.M FASEEM (Diploma in HRM-®) அவர்களும் கலந்து கொண்டார்.

மேலும் நாடாளாவிய ரீதியில் எதிர்வரும் நாட்களில் பல்வேறு பாடசாலைகளில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் பாடாசாலையிலும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளவும்  +94 76 028 8851.