எழுதுகிறேன் ஒரு கடிதம்

அன்புச் சகோதரியே!
இஸ்லாமியச் சோலையில் பிறந்து, ஈமானிய சுகந்தம் சுமந்த, என்அன்புச் சகோதரியே!

அறிவில்ஆகச்சிறந்த அரிவையரை ஈன்ற மார்க்கம் இஸ்லாம், நாணத்தில் சாலச்சிறந்த நங்கைகளால் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம், போர்முனையிலும் வீரமங்கைகளால் ஒளிர்ந்த மார்க்கம் இஸ்லாம்.

அவர்களின் வெட்கம் விலைபோகவில்லை, அவர்களது ஆடைகள் கோலம் மாறியதில்லை, கேளிக்கைகளை அவர்கள் நாடியதில்லை.

நீ! அன்னை பாத்திமாவின் வாரிசு. உனக்கென விரிந்திருப்பது தனிவழி அதைப் பேணி நடப்பதே மாண்பாகும்.

இஸ்லாத்தின் அடிச்சுவடுகளில் இருந்து உன் பாதங்கள் விலகிடும் கணமெல்லாம் நீ தூய இஸ்லாத்தையும் மாசு படுத்தி நரகிற்கான பாதையிலே பயணிக்கின்றாய்.

உணர்ந்து கொள் சகோதரியே! எல்லோரையும் போல எல்லோராலும் வாழ முடியாது. உம்மாஹாதுல் முஃமினீன்களின் வழி வாழ்ந்து ஈருலகம் வென்றிட முயல்வாய்.

மக்கொனையூராள்.

Tags: