நோன்பின் மாண்பு

ரமழான் என் தேசம் வந்து சென்றது
ரய்யான் சுவனவாசலின் முகவரி தந்து சென்றது

நோன்பிருந்து பக்குவமாய்க் கழித்தோம்
முப்பது நாட்கள்
மாண்பறிந்து இறைவன் கூலி தருவான் – ஆஹா அது நம் வாழ்வின் அற்புத நாட்கள்.

பட்டினி இருப்பதிலும் கிடைத்திடுமே
மனமகிழ்ச்சி – இது படைத்தோனின்
திருப்தி தேடும் ஓர் அற்புத நிகழ்ச்சி.

ஆறுவயதுப் பாலகரும் நோன்பிருக்கும் காட்சி
பேருவகைப் பெருவெள்ளம்
அல்லாஹ் அவனின் மாட்சி

அதிகாலைப் பொழுதெழுந்து
ஸஹர் செய்யும் நேரம்
தஹஜ்ஜுத்தில் குறைத்ததிடுமே
நம் இதயத்தின் பாரம்

பாவமான காரியங்கள் விலங்கிட்டிருந்தோம்
கோபமான பேச்சு கூட விளக்கியே நடந்தோம்

இராக்காலம் தராவீஹில் கிடைத்து புத்துணர்ச்சி
இனிய ரமழான் தந்ததெல்லாம்
நல்ல ஆன்மீகப் பயிற்சி

ஈகையில் மனம் குளிர்ந்தோம்
ஸதகா ஸக்காத் பகிர்ந்தோம்
ஏழைகளின் குடிசையிலும்
அகல் விளக்காய் ஒளிர்ந்தோம்

பசியிலே இருக்க வைத்து
பாடம் தந்தான் – படைப்பாளன்
நோன்பின் கூலி அவனே என்றான்.

மக்கொனையூராள்
Tags: