ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 01

”புள்ள…. அவசரமா தாத்தாவ கூட்டி கொண்டு வாங்கோ….”

சித்தியும்மா பரபரப்பாக கூறிவிட்டு சென்றார்.

பரீனா புன்னகையுடன் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்.

”ஏய்…. லூசு ஒன்ன தான் பாக்க வநதீச்சி…
எந்துகன் ரெடியாகாம கல்லுலி மங்கன் மாய் நிச்சிய…. வாவே உம்மா கூப்புட்ட….”

இவ்வார்த்தைகளைக் கேட்டவள் கேட்காதது போல முகத்தைத் திருப்ப, மீண்டும் பரீனா

”அடியேய்…. ஸொரி டீ… இப்ப வாவேன்…. வந்தீச்சிய எடம் நல்லம் என்டு வாப்பா பேசிகொண்டீந்த…. வாவே இந்த ‘பச்ச கலர் கிட்’ட உடுத்துகொண்டு…. ஒனக்கு இது பசுந்துடீ…”

அவளது இந்த வார்த்தைகளைக் கேட்டவளின் உதடுகள் லேசாக வளைந்தன.

அது புன்சிரிப்பா? இல்லை ஏளனமா? என பரீனாவால் இனங்காண முடியவில்லை.

”சரி….போ நீ…. நான் உடுத்துகொண்டு வாரன்….” பர்ஹா கூறவே,

”அப்பா…. இப்ப தான் நிம்மதி…. எகட தாத்தாட வாயால முத்துகுறியத பாக்ககொல….” அவள் சிரித்தபடியே சென்றுவிட்டாள்.

பர்ஹாவுக்கு இப்போதெல்லாம் பெண் பார்க்க வரும் சமாச்சாரமெல்லாம் மல்லிகைப் பூப் பறிப்பது போல சகஜமாகிவிட்டிருந்தது.

அவளுக்கு இப்போது இருபத்தெட்டாகிறது. நினைவிருக்க, இருபது வயதினிலேயே அவளுக்கு இது வாடிக்கையாகி விட்டிருந்தது.

வருபவர்கள் ஏதேதோ சொல்லி அவளை வேண்டாமென்பார்கள்.

‘ஹ்ம்….’ அவளது உள்ளம் ஏக்கப் பெருமூச்சு விட்டது .

கதவு தட்டும் ஓசை கேட்டு அவசரமாக கதவைத் திறந்தவளுக்கு அதிர்ச்சி !

தொடரும்…..

M.R.F Rifdha

Tags: