ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 04

”ஹேய் பர்ஹா நான் செல்லீச்சி தானே அந்த குட்டியோட பேச வேணாம் என்டு”

அவளின் உமும்மா முறைத்துப் பார்த்தார்.

”அல்லாவே! அவ தான் பேச வந்த என்னோட பாவம் அவ”

”ஓ இனி பாவம் புண்ணியம் எல்லம் பாத்துகொண்டீந்தா சரி இனி அவளோட மறுபடி பேசியத கண்டா பாத்துகொல ஏலும்.”

முகத்தை திருப்பியபடி சென்று விட்ட உமும்மாவை எப்படி பார்ப்பதென அவளுக்கு தெரியவில்லை.


மறுநாள் பொழுது வழமை போலவே விடிந்தது. பர்ஹா குளித்து விட்டு மொட்டை மாடியில் துணி காயப்போட்ட படி இருந்தாள்.

”பர்ஹா”

பலமாக ஒலி வரவே திரும்பியவளின் முகத்தில் புன்னகை.

”ஓ… நீங்களா எழும்பீட்டா? ”

ஷிப்னாவும் புன்னகை பூசிய முகமாய்

”ஓ…. வாறா எகட ஊட்டுகு?”

அவளது முகத்திலிருந்த புன்னகை அடியோடு மறைந்தது.

”ஹேய்…. ஒகட உமும்மாகு பயப்புடியா?”

” அல்லா! அப்டி இல்ல… வேல கொஞ்சம் ஈச்சி. அது தான்..”

”ஓ முடிச்சிட்டு வாங்கோ. எகடூட்ல உம்மாவும் உமும்மூட்டுகு போக பாக்கிய சோம்பற.”

”ஹா. நான் வாறனே.”

அவள் அவசரமாக அந்த இடத்தை விட்டு அகன்றாள். பர்ஹாவும் வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனாள்.

”தாத்தா. மச்சன்ட ஊட்லீந்து அவகட வாப்பா வந்து”

பரீனா பற்கள் தெரிய சிரித்துவிட்டு சென்றாள்.

”போதும் சிரிச்சதுடீ பல்லெல்லம் புழுந்துடும்.”

பர்ஹா கத்தியதுமே

” கத்தாத… அந்த மனிசருக எந்த நெனச்சியோன்டுமன் ”

சித்தியும்மா கடுகடுத்தார்.

”அல்லாவே! உம்மா சும்ம நில்லுங்கவே.”

”சரி… சரி. அவசரமா டீ ஊத்திகொண்டுவா.”

அவள் தேனீர் தயாரிப்பதில் பரபரப்பானாள்.

”தாத்தா ஓன்ட கலியாணம் கென்சல்.”

பர்ஹாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.

”எந்தேன்டீ செல்லிய?”

முகமெல்லாம் சோகரேகை படர,

”ஓ தாத்தா அந்த மாப்ள வேற தாரயோ விரும்பின ஒத்தராம்.”

சற்று நேர மௌனத்தின் பின்,

” அப்டியே வாப்பா வேணாம் என்டுட்ட.”

பர்ஹா சட்டென சிரித்தாள். அவள் பயந்த பார்வை வீச,

”எந்தேன்டீ…. ஏன்ட கலியாணம் தானே நின்ட…. ஓன்ட மூஞ்சி எந்தேன் இப்டி…”

கண்களை உருட்டி வாயை சுருக்கிக் காட்டியவளைப் பார்த்து பரீனாவும் சிரித்தாள்.

”எனக்கு கலியாணம் நடக்காட்டீம் பரவாயில்ல ஓன்ட கலியாணம் நடக்கோனும்டீ.”

ஏக்கப் பெருமூச்சு விட்டாள் பர்ஹா.

”நீ அப்டி செல்லாத தாத்தா..”

அவளங்கிருந்து செனறதுமே மௌனமாக அழத்தொடங்கியவளுக்கு ஷிப்னா கூறியவை ஞாபகம் வந்தது. அடுத்த வீட்டை நோக்கி நடந்தாள் .

தொடரும்.

M.R.F Rifdha.

Tags: