உள்ளுக்குள் ஆயிரம் காயங்களை மறைத்து
தன் பிள்ளையின் சந்தோசம் நிலைக்க
வெளியில் பொய்யாய் சிரிக்கும் ஓருயிர்…
சிந்தும் வியர்வையை ஒரு பொருட்டாக நினையாது
பிள்ளையின் வாழ்வு சிறக்கத் துடிக்கும் உயிரது..
சுட்டெரிக்கும் வெயிலில் கால் வைத்து
பிள்ளைகளின் ஆசைகளை தலையில் சுமந்து
அதனை நிறைவேற்றத் துடிக்கும் அவரின் நெஞ்சம்,
அவரின் உழைக்கும் கரங்கள்
நாம் இலட்சியம் காண உதவும்
விதங்கள் எத்தனையோ…
தந்தை என்பது வெறும் வார்த்தையல்ல
அது உயிருடன் உலாவும் போது
நம் பார்வைகள் பெரிதாக அங்கு படுவதில்லை…
உழைத்து உழைத்து ஓர் நாள் ஓயும் போதும்
அவரின் நிழலில் கூட
நம்மால் வாழ முடிவதில்லை…
இருக்கும் வரைக்கும்
அவருடன் மகிழ்வோம்,
அவரை மகிழ்விப்போம்…
Al.Rifnas