”ஏய்…. என்னயே எந்துகன் பாத்துகொண்டீச்சிய செல்லுவே?”
பர்ஹாவிற்கு அவளது முகத்தில் ஆயிரமாயிரம் பாவனைகள் தெரிந்தது. சட்டென கைகளைப் பற்றி,
”அவ… அவ நிச்சி சும்மா…. அவ ஒன்டும் செல்லல்ல….”
”பொய் செல்லாத… அவவ பத்தி எனக்கு தெரீம்… நான் தலாக் வாங்கின பொம்புலயன்டு ஏசின தானே?”
”அப்டி ஒன்டுமில்ல…. தெரீம் தானே அவட வயசுக்கு சும்ம ஒளம்பிய…. அத கனகெடுகக் வேணம்….”
ஏளனமான புன்னகையை உதிர்த்தவள்,
”அவ செல்லியதும் சரி தான் இனி….. இந்த சமூகமே பொம்புளேக்கி தானே ஏசிய….”
அவளது கண்களிலிருந்து கண்ணீர் கோடாக வடிந்து சென்றதை நோக்கிய பர்ஹா,
”ஷிப்ன தாத்தா…. எனக்கும் தெரீம்… எல்லதுகும் பொம்புளேக்கி தான் கொற செல்லிய…. நீங்க கவல பட வேணம்…. ஸாலிஹான ஒத்தர் ஒகளுக்கு கெடச்சும்….”
மீண்டும் ஏளனமாக உதடுகளை வளைத்துக் கொண்டு,
”ஸாலிஹான ஒத்தர்?”
புருவங்கள் வில் போல வளைந்தன.
”அதெல்லம் சும்ம படம் டீ…. அவனுக….”
பர்ஹாவின் தோள்களை தொட்டவள்,
”சரி… அத பத்தி பேச தேவில்ல… நீயும் கொலப்பிகொலாத…”
பர்ஹா அவளின் நிலை கண்டு பரிதாபப்பட்டாள்.
”எனக்கும் எப்டி ஆறுதல் செல்லவன்டே தெரியா? நீங்க கவல பட வேணம்…”
புன்னகையை வரவழைத்துக் கொண்டு,
”சரி…. சரி… வா உள்ளுகு போம் நான் கொஞ்சம் உடுப்பு புதிசா டிசைன் பண்ணின”
”அப்டியா ஸுப்பர்… பாக்கோம்…”
அவர்கள் அறையை நோக்கி நடத்த அந்த நிமிடமே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
”ஹேய்…. நீ நில்லு நான் பாத்துட்டு வாரன்….”
கதவைத் திறந்த ஷிப்னா,
”அஸ்ஸலாமு அலைக்கும்… பரீனா… வா உள்ளுகு….”
பதில் ஸலாம் கூறிய பரீனா,
”இல்ல தாத்தா… அவவ வாப்பா கூப்புட்ட அதுதான்…”
அறையிலிருந்து வேகமாக வந்த பர்ஹா,
”நான் நாளேக்கி வாரன்…”
”சரி…. அல்லாட காவல்….”
அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஷிப்னா.
தொடரும்.
M.R.F Rifdha.