”ஓ… இப்ப தான்…. அவசரமாக ரெடியாகுங்கோ மகள்….” சித்தியும்மா பரபரப்புடன் கூறிவிட்டு சென்றார்.
அக்கா, தங்கை இருவரின் முகத்திலும் இனம் புரியாத உணர்வொன்று ஒட்டிக் கொண்டது.
”இப்டியே பாத்துகொண்டீந்தா இனி சரிதான்… வா ரெடியாக ” பரீனா அவளது கைகளை பிடித்துச் சென்றாள்.
சற்று நேரத்தின் பின், கலகலப்பான பேச்சுக்கள் சுவாரசியமான சம்பாஷணைகள் என வந்தவர்களால் வீடே மாறியது. பர்ஹாவிற்கோ ஆயிரமாயிரம் எண்ண அலைகள் ஓடி மறைந்தன.
”தாத்தா… அவங்க கலியாணத்த அவசரமாக இந்த மாசமே வெச்சிகொலோம் என்டிய… மாப்ள வெளிநாட்லீந்து இன்னும் கொஞ்ச நாள்ல வாராம்…”
பரீனாவின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது.
”ஆ…. அப்டியா?” பர்ஹாவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டவள்,
”ஏ… ஒனக்கு இஷ்டமில்லயா?” பூ வாடுவது போல அவளது முகமும் வாடிப்போனது.
”அப்டி இல்ல…. விருப்பம் தான்…”
”அப்பா…. இப்ப தான் நீ ஏன்ட செல்ல தாத்தா…. ஆனாலும்.”
அவள் ஏதோ பேசத் தொடங்கு முன்பே அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டு சென்றவள் புன்னகைத்தாள் .
”ஆ…. சிப்ன தாத்தா…. வாங்கோ…”
”பாரகல்லாஹ் பர்ஹா… ஓன்ட கலியாணம் சரிவந்தாமே!” வியந்த பார்வையை வீசியபடி,
”ஒங்களுக்கு எப்டியன் தெரீம்?” சிரிக்கத் தொடங்கியவள் அவளது கைகளைப் பற்றிக் கொண்டே,
”அது… எப்டியோ தெரீம் உடுவே…. நான் வந்தது தப்பா?”
அவளது திடீர் கேள்வியை எதிர்கொண்டவள்,
”அல்லாவே! நீங்க வந்தது பெரிய சந்தோசம். நான் ஒகளோட பேச நெனச்சிகொணீந்த…”
”சரி…சரி… தாத்தா நீ சிப்ன தாத்தாவோட பேசிகொண்டிரீங்கோ நான் வாரன்…” பரீனா முன்வாசலை நோக்கி நடந்தாள்.
பர்ஹா, சிப்னாவின் முகத்தையே நோக்கினாள்.
” ஏய்….ஏன்ட மொகத்த அப்டி ரசிச்சாத… கண்ணூர் வந்துடும்…” அவள் சொல்ல இருவருமே சிரித்தனர்.
” பர்ஹா…. பர்ஹா….” சித்தியும்மா சத்தமாக அழைத்தபடி வந்துகொண்டிருந்தார்.
”வாங்கும்மா…”
”அதல்ல புள்ள… வந்தவங்க பெய்த்த… இந்த மாசம் கடசி கெழம கலியாணத்த வெச்சிகொலோம் என்ட…”
”எந்தேன்… இந்த மாசமா?” சிப்னா கேட்டாள்.
அவளது முகமே ஏதோ சரியில்லை என்பது போல பர்ஹா உணர்ந்தாள்.
தொடரும்.
M.R.F Rifdha