பயணம்

உலகில் உள்ள ஒவ்வொன்றும்
உள்ளத்தில் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டு
உலாவித் திரிவதே
உலகின் விதிமுறை!

பயணிகள் பயணிக்கும்
பயணங்கள் ஒவ்வொன்றும்
பாதை முடிந்த பிறகும்
பல கதைகள் சொல்லுமா?
இல்லை பாதி வழியிலே
பரிதவிக்க விடுமா? என்பது
பயணியின் சிந்தனையின்
வெளிப்பாடே அன்றி வேறில்லை!

வாழும் ஒவ்வொரு நொடியும்
ஏதோ ஒரு பயணம்!
எதற்காகவோ ஒரு பயணம்!
எதைத்தேடியோ ஒரு பயணம்!!
பிறப்பு முதல் இறப்பு வரை பயணம்!

பயணம் என்பது
பலர் மனம் வென்று
தன் மனம் வெல்லும்
தன்மை கொண்டால்
பயணிப்பதும் சுகம் தான்!
பாதைகளும் பரிசில் தான்!

பயணிப்போம்
பல கதை சொல்லும்
பலர் மனம் வெல்லும்
பல பிழை கொல்லும் வரை

பயணங்கள் ஒவ்வொன்றும்
அழகானவை தான்!
பயணிகள் விரும்பிப்
பயணிக்கும் வரை!

Shima Harees
University of Peradheniya

Tags: