ஏழைச் சிறுவனின் ஏக்கம்

பாடசாலை
சென்றதில்லையடா
பாடப் புத்தகமும்
படித்தில்லையடா
பையை சுமந்ததில்லையடா
நண்பனொடு கைகோர்த்து
போகனதில்லையடா!

சீருடையும் அணிந்ததில்லையடா
வீட்டுப்பாடம் செய்ததில்லையடா
விரல் வலிக்க எழுதவில்லையடா!

கண் விழித்து படிக்கவில்லையடா
பரீட்சையும் எழுதவில்லையடா
இதைக் கேட்க யாரும் இல்லையடா!

ஏழையாய்ப் பிறந்துவிட்டால்
கல்வியும் எட்டாகனியா
ஏற்றம்வாழ்வில் வாராதோ
ஏக்கமுடன் கேட்கின்றேன் நானும்!
பதில் வேண்டுமடா என் கேள்விகளுக்கு!

பாடசாலைப் போகவேண்டும்
பாடமும் படிக்க வேண்டும்
நண்பர்கள் விளையாட வேண்டும்
வீடு சென்று பாடங்களை
மீட்ட வேண்டும்
அன்றாடப் பாடங்களை
தாயிடம் கேட்டு படிக்கவேண்டும்
இப்படி பல ஆசைகள்
நிறைவேற இறைவனின் ஆசி வேண்டும்!

கவிதையின் காதலி
நுஸ்ரா ஆதம்

Tags: