பாராளுமன்ற சம்பளம் 12 மில்லியனை பகிர்ந்தளித்த கருணா கொடித்துவக்கு

 இரண்டு வருட கால (2020 – 2022) பாரளுமன்ற உறுப்பினர் சம்பளம்  உட்பட ஏனைய கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு என 12 மில்லியன் ரூபாவை மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு  பொதுமக்களுக்கு பகிர்ந்தளித்தார்.

இந்நிகழ்வு இன்று (18.09.2022) பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு, பேராசிரியர் அத்தநாயக்க ஹேரத், மாலிம்பட பிரதேச சபை தலைவர் சோமசிறி, அகுறஸ்ஸ பிரதேச சபை தலைவர் முனிதாஸ கமகே, அதுரலிய பிரதேச தலைவர் நிஹால் சில்வா மற்றும் உறுப்பினர் சமீம் இக்பால் உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

உறுப்பினரின் சத்திய பிரமாணத்திற்கு அமைய கடந்த இரண்டு வருட காலத்தில் உறுப்பினர் கொடுப்பனவாக  கிடைத்த 7,357,864.00 மற்றும் அலுவலக கொடுப்பனவாக கிடைத்த 4,498,080.00 என மொத்தமாக 11,855,944.00 ரூபாவை பகிர்ந்தளித்தார்.

இவை மாத்தறை மாவட்ட மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த 220 சமூக சேவை அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்று இதன் ஆரம்ப கட்ட நிகழ்வாக அகுறஸ்ஸ தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட அதுரலிய பிரதேச சபை, அகுறஸ்ஸ பிரதேச சபை மற்றும் மாலிம்பட பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சமூக சேவை நிறுவனங்களுக்கு தலா 50,000.00 வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலும் அடுத்த கட்டமாக வெலிகம தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட அமைப்புகளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு கருத்து தெரிவிக்கையில், தான் பதவிப் பிரமாணம் செய்யும் தனக்கு கிடைக்கு அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் வெகுமதிகளை மக்கள் சேவைக்காக பயன்படுத்துவதாக சத்தியப் பிரமாணம் செய்ததமைக்காக மேற்கொள்வதாக குறிப்பிட்டார். மேலும் எதிர்வரும் காலங்களில் கிடைக்கும் கொடுப்பனவுகளையும் இவ்வாறு மக்களுக்கு பகிந்தளிப்பதாக தெரிவித்தார்.

என்றாலும் இப் பிரதேச மக்களின் பலத்த எதிர்பார்ப்பு பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு 100 மீற்றர் அப்பால் உள்ள அவர் தினமும் பயன்படுத்தும் பானந்துகம ஆற்றுப்பள்ளத்தாக்கிற்கு மேம்பாலம் போடுவதாகும் எனவே 220 சமூக சேவை அமைப்புகளுக்கு தலா 50,000.00 வீதம் பகிர்ந்தளிக்காமல் அவர் ஏற்கனவே வழங்கிய உறுதி மொழிகளில் ஒன்றான பானந்துகம மேம்பாலத் திட்டத்தை ஆரம்பித்திருக்கலாம் என அதிக மழைகாலத்தில் ஆற்றுப்பள்ளதாக்கு நீரில் மூழ்குவதால் பயண இன்னல்களை எதிர்கொல்லும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். ibnuasad