சீதாராமம்

யார் சொன்னது
சீதாவும் ராமனும்
இணைவதற்கு
பிறவியெடுக்காதவர்கள் என்று??

எத்தனையோ சீதாக்கள் ராமனுடனும்,
எத்தனையோ ராமன்கள் சீதாவுடனும்,
உயிரோடு உயிராக
உள்ளத்தால்! உண்மையாய்!
உத்தமமாய்! உயிர்கொடுத்து
காதலித்து இணைந்தே
வாழ்ந்திட பிறவியெடுத்தார்கள்!

பிறவியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
இன்னும் பிறவியெடுப்பார்கள்!
ஆனால் காலம் தான்
ஏதோ ஒரு வகைக் கோலத்தினால்
சதி செய்து!
விதியை மாற்றி!
ராமன்களை உயிர் துறக்கவைத்து
சீதாக்களை விதவைகளாக்குகின்றன!
இன்னும்
ராமன்களை தபுதாரன்களாக்குகின்றன!

அதனையே இந்த சீதாராமும்,
பறைசாற்றுது உலகுக்கு!

“மாதம் 600 ரூபாய்
சம்பளம் எடுக்கும்
இரானுவ வீரனுக்காக
அனைத்தையும்
உதறி விட்டு வந்த
இளவரசியே!
இந்த ஜென்மத்திற்கு
விடைபெறுகிறேன்!
பிரின்ஸஸ் நூர்ஜஹான்.”

இத்துடனே
உனதும் எனதும்
காதல் முடிந்து விட்டது
என்று நினைக்காதே!

உன் காத்திருப்புக்கள்
அனைத்துமே
என்னை உன்னிடம்
வரச் சொல்வது
நீ விட்டுச் சென்ற அமைதியில்!

கண்ணீருடனான அசரீரியில்
எனக்கு மட்டும்
என்னிடம் வா,
என்னிடம் வா என
என்னை அழைப்பது
எனக்குக் கேட்கின்றது!
அமைதியை கிழித்துக் கொண்டு

யாருமற்ற அநாதை உன்னை.
யாவுமாக நான் ஏற்கவில்லையா?
இந்த அழைப்பையும் நான் ஏற்கிறேன்
அதற்காகவே உனக்காக காத்திருப்பேன்!

என் உயிர்,
என் உள்ளம்,
என் உணர்வு,
என் உடைமை,
என் வாழ்வு,
என் சாவு,
என் பிறவி,
என் ஆன்மா,
என் ஜென்மம்,
என் மறுபிறப்பு,
என் மொத்தம்,
என் முத்தம்,
என அனைத்தையும்
உனக்காகவே செலவு செய்து
வாழ்ந்திருப்பேன்!

நான் காத்திருப்பேன்
எனக்காக காத்திருப்பேன்
என் மரணம் வரும்
வரை காத்திருப்பேன்
உனக்காக மாத்திரம்
உனக்கானவளாய் காத்திருப்பேன்

மரணத்தின் பின்பு
இனி மீண்டும் பிரியாமல்
ஆன்மாவோடு
ஆன்மாவாக இணைந்திருப்போம்
அதற்காக காத்திருப்பேன்

உனக்கு நான்,
எனக்கு நீ,
நமக்கு நாம்.
உடல்கள் தான்
மரணித்த விடுகின்றன!

ஆனால் உள்ளத்துடன்
இணைந்த ஆன்மாவின் காதலோ
ஒரு நாளும் மரணிக்காது!
என் மரணத்தில் உன்னை
வெற்றிக் கொள்ள காத்திருப்பேன்!

இப்படிக்கு உன் காத்திருப்பின்
மனத் தவிப்புக்களை
தனிக்க தனிமையில் காத்திருக்கும்,
உன் நினைவுகளை சுமந்தபடியே
உன் உணர்வுகளோடும்,
நிழல்களுடனும்
நிஜமாக வாழக் காத்திருக்கும்
சீதாராம்
சீதா மகாலட்சுமி.
பிரின்ஸஸ் நூர்ஜஹான்

Hussain deen Fathima Badhusha.
Faculty of Islamic Studies and Arabic Language.
South Eastern University of Sri Lanka.

Tags: