ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 14

”சிப்னதாத்தா…” பர்ஹா அவளைக் கண்டதும் ஓடிச் சென்று கையைப் பற்றினாள்.

”ஹேய். தாத்தாக இன்னும் வரல்லயா?  ”

”இன்னும் இல்ல… இப்ப வாராச்சும்…”

”ஹா… நாளேக்கென்டு தான் சென்ன… ஆனா இன்டேகி மறுபடி வாரன்டு….” அவள் பெருமூச்சு விட்டாள்.

”ஹா… அதுகும் ஹய்ர்… எல்லம் நலவு தானே அல்லா நாடினா…”

”அதுகும் சரிதான்…” வீட்டின் முன்பு சத்தம் கேட்டு திரும்பியவர்கள்,

”ஹா… வந்துட்டா… எந்தேன் கத…” பர்ஹாவைக் கண்ட சிப்னா சிரித்தாள்.

அவளது முகத்தில் பதற்றத்தைக் கண்டவள்,

”நான் சும்ம கேட்ட… நீ டென்ஷனாகாத…”

”சரி… இவள அவசரமா ரெடியாக செல்லுங்கவே இனி… ”

சித்தியும்மா  பதற்றத்துடன் கூறியதும்,

”நீங்க ஒன்டும் கவலபட வேணம்… சரியா!”

சிப்னா அவரின் கைகளை அழுத்திப் பற்றினாள்.

”அவங்க எத்ன மணீக்கன் வாரன்ட? ”

”அய்தான்… இப்ப எஷாகு பொறகு வாரன்டு சென்ன…”

”ஹா… அப்ப இன்னும் டைம் இருச்சி… ரெடியாக…”

சிப்னாவின் வார்த்தைகளில் சிரிப்பை உதிர்த்தவள்,

”தாத்தாவோட யாருமே இப்டி பேச வந்தில்ல… இவர் தான் இப்டி…” கண்களை சிமிட்டியவளை செல்லமாகத் தட்டி,

”போதும்டீ… ஓன்ட வேலய பாரு…”

”போதும் தாத்தாவும் தங்கச்சும் சண்டபுடிச்சது… இங்க வந்து இத செஞ்சி தாவே” சித்தியும்மா கூறியதும் சிப்னா,பரீனாவும் சமையலறையின் பக்கம் நடந்தனர். பர்ஹா பலத்த யோசனையிலிருந்தாள்.

தொடரும்.
M.R.F Rifdha…..