அக்குரனை மக்களே! பிரார்த்தனைக்கு முன் ஒட்டகத்தை கட்டிவையுங்கள்

ஆண்டாண்டு தொடக்கம் வெள்ளப்பெருக்கு பற்றி அறிந்திடாத அக்குரனை நகரம் அண்மைக்காலமாக ஒரு பூனைக்குட்டி சிறுநீர்கழித்தாலும் வெள்ளப் பெருக்கா மாறும் அளவில் நிலமை மோசமடைந்துள்ளது.

இதற்கான காரணங்கள் என்ன என்பது தற்போது கானெளிகளில் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

பணம் மட்டும் தான் உலகம் என சிந்திக்கும் ஒரு சில சுயநல வாதிகளின் செயற்பாடே இதற்கான காரணமென உண்மைகள் வெளியாகியுள்ளன. இவர்களின் குறுகிய சிந்தனையால், தன் நலம் மட்டும் என்ற போக்கே இன்று பல குடும்பங்களை நடு வீதியில் நிறுத்தியது.

அண்மைக்காலங்களில் அவ்வப்போது சிறு சிறு மழையிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, இயற்கை அன்னை இவர்களுக்கு ஏச்சரிக்கை செய்த போதிலும், ஊர்மக்கள், ஊர் அரச நிர்வாகம் மற்றும் ஊர் முக்கயஸ்தர்கள் இது பற்றி கவணம் செலுத்த வேண்டிய துறைகள் இது பற்றி கவனம் செலுத்தவில்லை.

ஆற்றை மறைத்து கட்டிடங்களை கட்டி கோடிகளை சம்பாதித்தவர்களுக்கு இது ஒரு சிறு கோனளாக இருந்தாலும், ஒரு சில சுயநலவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக அப்பாவியாக இருந்த மக்கள் சிலர் அனைத்தையும் இழந்து நிர்கதியான நிலைக்கு ஆளாகினார்கள்.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது துஆ செய்யும் படியும் உதவிகளைக் கோறியும் இணையத்தளங்கள் வழியாக கவலைகளை செவியேற்க முடிந்தது.

அக்குரனை ஜமீயதுல் உலமாவும் அறிக்கைகளை வெளியிட்டிட்ருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதன் பிரகாரம் மக்கள் பிரார்த்தனை செய்தார்கள். உதவி வசதிகள் உள்ள மக்கள் உதவிகளை வாரி வழங்கினார்கள். இது கட்டாயம் செய்யப்பட்ட வேண்டியவிடயம். அதில் மாற்றுக் கருத்தில்லை .

ஆனா‌ல் வெள்ளம் வரும்போது குரல் கொடுத்த ஊர் முக்கியஸ்தர்களும், ஜமீயத்துல் உலமாவும், அற்றை மறைத்து பெரிய அளவி்ல் கட்டிடங்கள் கட்டப்படும் போதும் சி‌றிது சிறிதாக வெள்ளம் வரும்போது அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலும் எங்கே இருந்தார்கள என்பது புரியாததாவேக உள்ளது.

வரலாறு காணாத வெள்ளம் வந்து கோடான கோடிகளை அள்ளிச் சென்ற போதிலும், இதற்கான கண்டனங்களை தெரிவிப்பதையோ அடுத்த நடவடிக்கைக்கு இறங்குவதையோ காணமுடியவில்லை என பாதிப்படைந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உதவிக்காக அறிக்கை விட்டவர்களும் பிரார்த்தனைக்கா குரல் கொடுத்தவர்களும் தனவந்தர்களின் பண வெள்ளத்தில் அடிபட்டுச் சென்றார்களா? அல்லது தனவந்தர்களின் அன்பு வெள்ளத்தில் அடிபட்டுச் சென்றார்களா?

அல்லது இனி இது போன்ற ஒரு, அல்லது இதை விட பெரிய வெள்ளம் வரவே வராது என இயற்கை உத்தரவாதம் வழங்கியதா எனத் தெரியவில்லை.

ஒட்டகத்திற்கு இறைவனிடம் பாதுகாப்பு தேடமுன் ஒட்டகத்தை கட்டிவைக்க வேண்டு்ம் என்ற இஸ்லாமிய அடிப்படையை கோட்பாட்டை இவர்கள் அறியவில்லையா? அல்லது மீ்ண்டும் ஒரு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பின்பு மீ்ண்டும் பிராத்தனை
செய்யும்படி கதறுவதா?

இவர்கள் நாட்டில் வாழும் ஏனைய முஸ்லிம்களைப் பற்றியும் சிறிது சிந்திபார்களா?

ஏற்பட்ட வெள்ப்பெருக்கிற்கும், அழிவுக்கும், அடுத்த மக்கள் மீதும் ஊர் மீதும் அக்கறை கொள்ளாத சுயநலம் கொண்ட ஒரு சில மக்களே தான் காரணம் என்பதை ஊடகங்கள் மூலம் உலகத்திற்கு காட்டப்பட்டது.

நீர் வடிந்து செல்லும் கால்வாயை மறைத்து வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டியது ஊரின் அடுத்த மக்கள் மீதும், நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் ஏனைய முஸ்லிம் மக்கள் மீதும் கவலையும் கரிசனையும் கொள்ளாமல் செய்த அநியாத்திலும் பெரும் அநியாயமாகவும் அக்கிரமமாகவுமே நோக்க வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் இனவாதிகளால், மற்றும் இனவாத அரசியல் வாதிகலாலும் இவ்வாறான செயல்கள் இனவாதத்திற்கு சந்தர்ப்பமாக எடுத்து, முஸ்லிம் மக்கள் சுயநலவாதிகள், வாழும் நாட்டின் மீது அக்கறையற்றவர்கள் என முத்திரை குத்தப்பட்டதை நாம் அறிவோம்.

இந்த அக்குரனை ஒரு சில சுயநலவாதிகளின் செயல்கள் நாட்டில் ஏனை பகுதிகளில் பரந்துபட்டு வாழும் முஸ்லிம் மக்களின் முகத்தில் அழுக்கை, கரியை பூசிய செயலாகும்.

இம் மக்கள் நாட்டில் வாழும் ஏனைய முஸ்லிம் மக்களையும் பற்றியும் சற்று சிந்திக்கவேண்டும். இவர்களின் இந்த வகையிலான செயலையலகளை இனவாதிகள் தங்களுக்கான சந்தர்ப்பம் வரும்போது, சந்தர்ப்பவாதிகள் கையில் ஜஎடுப்பார்கள் என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வளவு பெரிய அழிவை சந்தித்த இப்பகுதி மக்கள் இனியும் இவ்வாறான அழிவுகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முற்படுவதாக இன்னும் தெரியவில்லை.

இதைவிடப் பெரியதாக வெள்ளம் வராது என்பதில் நிச்சயமும் இல்லை. எனவே காலத்திற்கு காலம் இவ்வாறான அழிவுகளை சந்திப்பதா? எனவே இதன் பிறகாவது அங்குரனை மக்களும் சிந்திப்பார்களா?

பேருவளை ஹில்மி