பாரியா செலவில் ஜம்மிய்யவின் நூற்றாண்டு விழா காலத்தின் தேவைதானா?

  • 383

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 1924 ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்டு, அன்று முதல் இவ்வமைப்பில் உலமாக்கள், புத்தி ஜீவிகள் என பலரும் பங்கு கொண்டு, தொடர்ந்து பல சவால்களை எதிர் கொண்டு, காலத்தை ஓட்டி வந்தனர். தற்போது இவ்வமைப்பானது நூறு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது.

இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், இதில் சமூகத்திற்கு வழிகாட்டக்கூடிய மூத்த உலமாக்கள், புத்திஜீவிகள், அனுபவசாலிகள், சீர்திருத்தவாதிகள் போன்றவர்கள் அங்கம் வகித்து சமூக நலன்களையும் சமூகப் பொறுப்புக்களையும். நிறைவேற்றி, ஓயா அலைகளில் ஓடும் படகைப்போல் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்தும் பல்வேறு ரீதியான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு செவ்வனே நடத்தி வந்தனர்.

அண்மைக் காலமாக உலக மோகம் கொண்ட சிலரால் அவ்வப்போது அரசியல் நோக்கங்களுக்காகவும் தனிப்பட்ட இலாபங்களுக்காகவும் சமூக சிந்தனையற்ற முடிவுகள் எட்டப்பட்டு திசைமாறிச் சென்றபோதிலும், இலங்கை நாட்டில் இவ்வாறான ஒரு சட்ட பூர்வமான அமைப்பை பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இவ்வமைப்பானது இலங்கை நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு இலவசமாகவோ இலகுவாகவோ கிடைக்கப்பெற்ற ஒன்று அல்ல.

இதற்காக நம் முன்னோர்கள் நாட்டிற்காக பல தியாகங்களையும், விலை மதிக்க முடியாத சொத்துக்களையும் தியாகங்கள் செய்தே இவ்வுரிமையை நமக்காக பெற்று தந்தனர்.

ஒரு சிலரின் தனிமனித விவகாரங்களுக்காவோ அவர்களின் பதவிக்கால ஆசைகளை பூர்த்தி செய்யும் விதத்திலோ இவ்வமைப்பானது பலிக்கடாவாகமல் பாதுகாத்துக் கொள்வது நமது ஒவ்வொருவர் மீதும் தலையாய கடமையாகும்.

ஆயிரம் தலைமைகள் மாறலாம். உறுப்பினர்கள் மாறலாம். தலைமைகளுக்காக அமைப்பு என்ற பரிதாப நிலை மாறி, அமைப்புக்காக தலைவர்கள் என்ற நிலை உருவாக வேண்டும்.

கடும் மழைக்கும் அடிககும் புயலுக்கும் சுடும் வெயிலுக்கும் ஈடுகொடுத்து சுமார் பத்து தசாப்த காலத்தை கடந்து வந்த ஜம்இய்யாவின் கடினமான பாதையின் வரலாற்றுக்கு வர்ணனைகள் வரையறைகள் இல்லை.

கடும் கஷ்டத்திற்கும் வறுமைக்கும் மத்தியில் எந்தவித உலக லாபமும் எதிர்பாராமல், எவ்வித அரசியல் லாபமும் இன்றி, கையளவில் அடக்கி, தூக்கிச் செல்லும் ஒரு பைக்குல் நாலு அடையாள பதவி முத்திரைகளுடன் அடங்கபட்டிருந்த ஜம்மிய்யாவின் வரலாறும், இதற்காக தியாகம் செய்தவர்களின் வரலாறும் திரைமறைவில் மறைக்கப்பட்ட வரலாறாக, அல்லது மறக்கப்பட்ட வரலாறாக மறைந்து அல்லது மறந்து நிற்கின்றது.

இதில் பங்கு கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அந்த நாற்கூலி அவர்களை சென்றடைய வேண்டும்.

இவ்வாறான தியாகிகளின் தியாகங்கள் நினைவு கூறப்பட வேண்டும். அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்யப்படல் வேண்டும். அவர்கள் தொடங்கி வைத்த இந்த ஆள விருட்சத்தின் நிழல் அவர்கள் மறைந்து வாழும் மண்ணறைக்காக நிழல் கொடுக்க வேண்டும்.

இதற்காக , மாண்டு போனவர்களின் மண்னறைக்கு நிழல் சேர்ப்பதற்கும், அவர்களின் மண்னறைகளுக்கு ஒளி சேர்ப்பதற்கும் பல வழி முறைகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது.

இஸ்லாம் காட்டித் தந்துள்ள வழி முறையானது நாம் தெரிவு செய்யும் வழி முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், சமூகத்திற்கு பிரயோசனமானதாகவும் அழகானதாகவும், உலகம் வியக்கக் கூடியதாகவும் காணப்படுகிறது.

இஸ்லாம் காட்டித் தந்த அழகிய வழிமுறைகளை புறந்தள்ளி விட்டு, விழாக்களுக்காகவும் கொண்டாட்டங்களுக்காவும் மக்கள் பணத்தில் கோடிகளை அள்ளிவீசி கோலாட்டம் போடுவது இஸ்லாமிய வழிமுறை தானா?

அண்மையில் மாற்று மதத்தைச் சேர்ந்த புதுமணத்தம்பதிகள், தம் திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை ஒரு குடிசையில் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்ததும், இன்னொரு குடும்பம் தங்களது திருமணத்திற்காக ஏழை எளிய மக்களுக்கு உணவுப்பண்டங்களை வாரி வழங்கியதையும் சமூகவலைத்தளங்களில் நாங்கள் கண்டோம்.

மாறாக வசதிபடைத்த மக்கள் பல கோடிகளை அள்ளி வீசி பொன்நகை அணிந்த மாளிகைகளில் பாலாறும் தேனாறும் அருவி கலாய் ஓட , புன்னகை இழந்த மண் குடிசைகளில் வறிய மக்கள் பட்டினியால் வாடும் ஒரு சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதை அண்மைய வெளியாகிய காணொளிகளில் நாம் கண்டோம்.

இந்நிலைமையை மாற்றி அமைக்க சமூக சீர்திருத்தவாதிகள் எடுத்துக்காட்டாக மாரி கடும் பிரயத்தனமும் உறுதியும் கொள்ளாது இருப்பது ஏன்?

இன்று இது மாற்று மதத்தினர்களிடமிருந்து இஸ்லாமியர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய நற்பாடமே தவிர, இஸ்லாமியர்களிடம் இருந்து அந்நியர்கள் கற்றுக்கொள்வதற்கு எந்தவித சிறப்புக்களும் நம்மிடம் காணப்படவில்லை.

இந்நிலையில் ஜம்மிய்யவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் 19 ஆம் திகதி பண்டார நாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் பாரிய செலவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வழிமுறைப்படியும் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மக்களின் கஷ்டமான நிலைமையில் இது பொருத்தம் தானா ?

இன்றைய நாட்டின் நிலமையில் பாடசாலை உபகரணங்களை வாங்க முடியாமல் தவிக்கும் ஆயிரமாயிரம் மாணவச் செல்வங்கள் ஏன் சமூக சீர்திருத்தவாதிகள் இதைப்பற்றி சிந்திக்கக் கூடாது?

இன்று ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் பாடசாலை செல்லுமாயின்,வசதி படைத்தவர்களுக்கும் கூட நிலமை கவலைக்கிடம் தான்.

நாட்டுப்புற புற பாடசாலைகள் பலவற்றில் தரையில் உட்கார்ந்து படிக்கும் மாணவர்கள் படிக்கும் நிலையில், நாலு அரசியல்வாதிகளை வரவழைத்து அவர்களுக்கு செங்கம்பளம் விரித்து அவர்களுக்கு மாலை இடுவதை விட, வருமை செழுமையாக வளர்ந்திருக்கும் உள்ளங்களை குளிரவைத்து அவர்களுக்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து, வறுமைக்கோடையில் சிக்கி வறண்டு போயிருக்கும் உள்ளங்களை புன்னகையால் அலங்கரித்தால், இதுவே ஜமியா நூற்றாண்டு விழாவில் பொன்நகை அணிந்து பெற்றுக்கொள்ளும் பாரிய வெற்றியாகும் அல்லவா.

இதுவே நம் தலைவர் நபிகள் நாயகம் நமக்கு காட்டித்தந்த வழிமுறை அல்லவா. ஆக மேலான அவரின் வழிமுறைகளை,வாயினால் மட்டும் காவியம் பாடி நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்?

சம காலத்திலா கல்வியை கைவிடும் நிலையில் பல தலைசிறந்த திறமையான மாணவர்கள். இவர்களுக்கு சமூகம் கை கொடுக்குமாயின் இவர்கள் நாளை சமூகத்தை வழி நடத்தக்கூடிய தலை சிறந்த தலைவர்கள் ஜம்இய்யாவின் நூற்றாண்டு விழாவை காரியாலயம் மட்டத்தில் மாத்திரம் நடத்தி , நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்தாயிரம் அல்லது குறைந்தது ஆயிரம் மாணவர்களுக்காவது பாடசாலை உபகரணங்களை வழங்கி அவர்களின் கல்விக்கு உதவி செய்தால் இவ்வமைப்பை ஏற்படுத்திச் சென்ற, மாண்றோர் சான்றோர் அனைவரினதும் ஈருஉலகமும் செழிப்பாகி, சமூகமும் பிரயோசனம் அடைந்து, பல ஆயிரம் குடும்பங்களின் கல்விக் பிரச்சினையும் தீரும் அல்லவா.

இன்று பல பாடசாலைகளில்ஃதமக்கு கிடைக்கும் சொற்ப ஊதியத்தில் பல வறிய பிள்ளைகளின் கல்விக்காக உதவி செய்யும் சில நல்ல உயரிய உள்ளங்கள், ஆசிரிய, ஆசிரியைகளின் உயரிய உள்ளம் உயிர் வழும் நிலையில், மூச்சு திணற பணத்தை சம்பாதித்து முகடு முத்தமிடும் வரை முட்டை காட்டிவைத்துள்ளவர்களின் உள்ளங்கள் மறித்துப்போனது ஏன்.

இதை விடுத்து மேற்குறிப்பிட்டது போன்று ஒரு தனி மனிதனின் ஆசைகளுக்கும் அபிலாசைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மக்கள் பணத்தில் கோடிகளை அள்ளி வீசுவது சமூக சீர் திருத்தவாதிகளுக்கு பொருத்தம் தானா?

இதற்கு கெதிராக நிர்வாக மட்டத்தில் பாரிய எதிர்ப்புக்கள் இருந்தும் அவற்றைக் கவனத்தில் கொள்ளாது, மேற்குறிப்பிட்டது போன்று ஒரு தனி மனிதனின் பதவிக்கால ஆசையை நிறைவேற்ற, சில அரசியல்வாதிகளை திருப்திப்படுத்த மக்களின் பணத்தை ஆக்கலாமா?

பொறுப்புக்கள் பதவிகள் என்பது ஒரு அமானிதமாகும். இது சரியான முறையில் கையாளப்பட வேண்டும் . எனவே நினைவு தினங்களை கொண்டாட மார்க்கம் காட்டித் தந்த ஆயிரம் வழிமுறைகள் இருக்க, அதை விடவும் முஸ்லிம் சமூகம் இவ்வாறான ஒரு நெருக்கடி நிலையில் இருக்கும்போது பல கோடிகளை அள்ளி வீசி கொண்டாடும் கொண்டாட்டத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா?

பொறுப்புக்களையும் அமாநிதங்களையும் பாதுகாத்துச் செயல்படுவோம்.

பேருவளை ஹில்மி

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 1924 ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்டு, அன்று முதல் இவ்வமைப்பில் உலமாக்கள், புத்தி ஜீவிகள் என பலரும் பங்கு கொண்டு, தொடர்ந்து பல சவால்களை எதிர் கொண்டு, காலத்தை ஓட்டி…

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 1924 ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்டு, அன்று முதல் இவ்வமைப்பில் உலமாக்கள், புத்தி ஜீவிகள் என பலரும் பங்கு கொண்டு, தொடர்ந்து பல சவால்களை எதிர் கொண்டு, காலத்தை ஓட்டி…

44 thoughts on “பாரியா செலவில் ஜம்மிய்யவின் நூற்றாண்டு விழா காலத்தின் தேவைதானா?

  1. I’m still learning from you, but I’m improving myself. I definitely love reading everything that is written on your website.Keep the posts coming. I enjoyed it!

  2. You really make it seem so easy together with your presentation but I in finding this topic to be really something that I believe I would never understand. It sort of feels too complicated and extremely large for me. I am looking forward on your subsequent submit, I will try to get the dangle of it!

  3. What Is Aizen Power? Aizen Power is presented as a distinctive dietary supplement with a singular focus on addressing the root cause of smaller phalluses

  4. A person necessarily lend a hand to make seriously articles I would state. This is the first time I frequented your web page and to this point? I amazed with the research you made to create this actual submit incredible. Great process!

  5. Aw, this was a very nice post. Taking the time and actual effort to produce a really good article but what can I say I procrastinate a lot and never seem to get anything done.

  6. After exploring a few of the blog articles on your web site, I really like your way of blogging. I added it to my bookmark website list and will be checking back soon. Please check out my web site as well and let me know how you feel.

  7. Pretty section of content. I just stumbled upon your weblog and in accession capital to assert that I acquire in fact enjoyed account your blog posts. Any way I’ll be subscribing to your augment and even I achievement you access consistently fast.

  8. Neat blog! Is your theme custom made or did you download it from somewhere? A design like yours with a few simple adjustements would really make my blog jump out. Please let me know where you got your design. Many thanks

  9. If you want to increase your knowledge only keep visiting this website and be updated with the most recent information posted here.

  10. Great write-up, I am regular visitor of one¦s web site, maintain up the nice operate, and It is going to be a regular visitor for a long time.

  11. I like what you guys are up too. Such smart work and reporting! Keep up the excellent works guys I’ve incorporated you guys to my blogroll. I think it’ll improve the value of my website 🙂

  12. The other day, while I was at work, my sister stole my iphone and tested to see if it can survive a thirty foot drop, just so she can be a youtube sensation. My iPad is now broken and she has 83 views. I know this is completely off topic but I had to share it with someone!

  13. I’ve read several good stuff here. Definitely worth bookmarking for revisiting. I wonder how much attempt you put to create this kind of wonderful informative site.

  14. An intriguing discussion is worth comment. I believe that you should write more on this topic, it might not be a taboo subject but usually people do not discuss such subjects. To the next! Cheers!!

  15. Pretty section of content. I just stumbled upon your web site and in accession capital to assert that I acquire in fact enjoyed account your blog posts. Any way I’ll be subscribing to your augment and even I achievement you access consistently fast.

  16. Hello! I could have sworn I’ve been to this blog before but after browsing through some of the posts I realized it’s new to me. Anyhow, I’m definitely happy I came across it and I’ll be bookmarking it and checking back frequently!

  17. Развивай свою интуицию и удачу с Лаки Джет – игра, которая лишит тебя скуки и увлечет на долгие часы. Лаки Джет на 1win – игра, которая подарит тебе море эмоций и возможность заработка.

  18. I was just seeking this information for a while. After six hours of continuous Googleing, finally I got it in your site. I wonder what is the lack of Google strategy that don’t rank this type of informative web sites in top of the list. Generally the top websites are full of garbage.

  19. Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to make your point. You definitely know what youre talking about, why waste your intelligence on just posting videos to your blog when you could be giving us something enlightening to read?

  20. Howdy, i read your blog occasionally and i own a similar one and i was just wondering if you get a lot of spam responses? If so how do you stop it, any plugin or anything you can suggest? I get so much lately it’s driving me mad so any assistance is very much appreciated.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *