ஈழத்திருநாட்டின்
உதய சூரியனாய்
உமருலெப்பை கதீஜா தம்பதியினர்
ஈன்றெடுத்த மாமுத்து
தும்புளுவாவையூர் புனிதர்
மண்ணறையில் நின்றும்
மனங்களில் வாழும்
ஹனீபா ஹஸ்ரத்
உலமா தலைமுறையில்
உத்தமராய் உதித்தவர்
மண்ணறையில் நின்றும்
மனங்களில் வாழ்பவர்
கலாம் கல்வி செல்வங்களை
கல்பில் சுமந்த குடும்பமதில்
கல்விமான் வாரிசாய்
கண்ணியமாய் பிறந்தவர்
கச்சிதமாய் கடமையிலும்
கல்லூரியில் வென்றவர்
மண்ணறையில் நின்றும்
மனங்களில் வாழ்பவர்
இளமையிற் கல்வியதை
அல் அஸ்ஹரில் பெற்று
பயிற்றுனர் பயிற்சியால்
பட்டமும் பெற்றவர்
மறையை மனதிலேந்திய
மங்காத ஆலிமவர்
மண்ணறையில் நின்றும்
மனங்களில் வாழ்பவர்
பண்புள்ள ஆசானவர்
பக்குவ மேதையவர்
பல மனங்களில் வாழும்
பஹ்ஜி ஹஸ்ரத்தவர்
மாணாக்களில் இருளகற்றி
மங்காத ஒளியூட்டியவர்
மண்ணறையில் நின்றும்
மனங்களில் வாழ்பவர்
தஸ்கரை மண்ணில்
தரணியும் வியக்க
தள்ளாத முதுமையில்
தன்னை மறந்தவர்
ஹக்கானியா ஸ்தாபகர்
ஹாபிழ்களை உருவாக்கி
மண்ணறையில் நின்றும்
மனங்களில் வாழ்பவர்
நேரம் தவறாது
நேர்மையாய் நடந்தவர்
நேசத்தை போதித்த
நேதா அவர்
தஃவத்தில் நிலைத்தவர்
தலைப்பாகையுடன் திகழ்ந்தவர்
மண்ணறையில் நின்றும்
மனங்களில் வாழ்பவர்
இறையோன் அழைப்பேற்று
இவ்வுலகை நீத்தார்
இறைவழியில் அர்ப்பணித்து
இயனெறியால்
மண்ணறையில் நின்றும்
மனங்களில் வாழ்பவர்- அன்னார்
மண்ணறையை ஒளியாக்கி
மஹ்ஷரில் ஈடேற்றி
சுவனபதியை அருள்வாயே
வல்லோனே ரஹ்மானே!