ரூம் நம்பர் 418 பாகம் 1

நீண்ட காலமாக அடைக்கப்பட்ட அறை அது; வெளிச்சத்தை கண்டே பல நாட்களான நிலையில் எங்கும் இருள் மட்டுமே ஆக்கிரமித்து கொண்டிருந்தது. வெள்ளை பூசிய நான்கு சுவர்களின் நடுவே தூசி படிந்த நிலையில் ஒரு மின்விசிறி; சுவரின் இரு பக்க மூலையில் மங்கலான கண்ணாடி குவளைக்குள் அடைந்து கிடக்கும் ஒளி விளக்குகள்; இடைக்கிடை சிலந்தி வலை; மேல், கீழ் என இவ்விரண்டு கட்டில்கள்; அதனோடு இணைக்கப்பட்ட நீண்ட லாட்சி; படிப்பதற்காக இரண்டு பெரிய மேசைகள்; அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. அதனோடு சேர்ந்த நான்கு கதிரைகள்; இரண்டு ராக்கைகளில் ஒன்று உடைந்த நிலையில் இருந்தது. அறைக் கதவில் சரிவாக 418 என்ற இலக்கப் பலகை; குப்பைகளால் நிரப்பப்பட்ட அளவான பெல்கனி என அந்த அறை அலங்கோலமாக காணப்பட்டது.

ஆம்! அது ஒரு பல்கலைக்கழக விடுதி. அதுவும் பெண்களுக்கான விடுதி. அதில் நான்காவது மாடியின் நடுவில் இருக்கும் அறை தான் “ரூம் நம்பர் 418”

மாலாவும் கமலாவும் ஒருவாறு அந்த அறையை கண்டு பிடித்து விட்டனர்.

“அப்பாடா… ரூம கண்டு புடிச்சிடோம்டி…” என்ற மாலா பெருமூச்சு விட்டபடி லெக்கேஜை சுவர் ஓரமாக சாய்த்து விட்டு கமலாவை பார்த்தாள்.

“அடி…கதவ தொறடி…” என்று கெஞ்சுதலாக கமலா கூற…

“கீ எங்கடி…!”

“கீ….எடுத்துட்டு தானே வந்தேன் இப்ப எங்க போச்சி…?”

எங்கு தேடியும் சாவி கிடைக்கவில்லை. சரி கீழே எங்கேயாவது தவறுதலாக விழுந்திருக்கும் என நினைத்து கொண்டு மாடிப் படியில் இருந்து கீழே இறங்கினார்கள்.

“கைல தானே எடுத்தேன்.. அதுக்குள்ள எங்க போச்சி..” என்ற குழப்பத்துடன் இருவரும் சாவியை தேடிக் கொண்டிருந்தனர்.

சாவியை இவர்கள் தொலைத்தார்களா? இல்லை சாவி தான் தொலைந்து போனதா என்று நாமும் பொறுத்திருந்து பார்ப்போமே!

தொடரும்…
யாவும் கற்பனை
Noor Shahidha

5 thoughts on “ரூம் நம்பர் 418 பாகம் 1

 • May 29, 2023 at 12:20 pm
  Permalink

  Howdy just wanted to give you a quick heads up. The words in your content
  seem to be running off the screen in Internet explorer. I’m not sure if this is
  a format issue or something to do with internet browser compatibility but I figured I’d post to let you know.
  The layout look great though! Hope you get the problem solved
  soon. Many thanks

 • May 9, 2023 at 9:47 pm
  Permalink

  Hiya, I’m really glad I have found this information. Nowadays bloggers publish only about gossips and web and this is actually frustrating. A good website with exciting content, that’s what I need. Thanks for keeping this website, I’ll be visiting it. Do you do newsletters? Can’t find it.

 • April 26, 2023 at 11:09 am
  Permalink

  Excellent starting…. keep it up

 • April 26, 2023 at 11:07 am
  Permalink

  Excellent starting…. keep it up

 • April 26, 2023 at 10:30 am
  Permalink

  Very interesting beginning… we will hope next episode eagerly.. well done shahidha…💗💗💗💗💗

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *